மாரி வெற்றி - மாரி-2 தயாராகிறது!

Bookmark and Share

மாரி வெற்றி - மாரி-2 தயாராகிறது!

சமீபகாலமாக ஒரு படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் உருவாகுவதாக அதிகரித்து வருகிறது. முனி, காஞ்சனா,  காஞ்சனா-2 என தொடர் படங்களை எடுத்தார் லாரன்ஸ். தற்போது வௌியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி, இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

இதேப்போன்று கமலின் விஸ்வரூபம்-2 உருவாகி வருகிறது.  அந்த வரிசையில் நடிகர் தனுஷூக்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய பிரேக் கொடுத்த வேலையில்லா பட்டதாரி படமும் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் வேளையில், மாரி படமும் இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாக தற்போது தகவல் வௌியாகியுள்ளது.

காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் போன்ற படங்களை எடுத்த பாலாஜி மோகன், தனுஷ், காஜல் அகர்வாலை வைத்து இயக்கிய படம் மாரி. இப்படம் விமர்சனம் ரீதியாக சில குறைகளை சந்தித்தாலும் படம் பக்கா பொழுதுபோக்காக இருப்பதால் வசூலில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. இதுவரை தனுஷ் நடித்த படங்களின் ஓப்பனிங் வசூலை மாரி முறியடித்துள்ளது.

அதிலும் தனுஷ் இந்தப்படத்தில் அடிக்கடி பேசும் செஞ்சுருவேன் டயலாக்கிற்கு ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், மாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

முதல்பாகத்தின் முடிவில் தனுஷ்-காஜல் உறவு வெறும் நட்பாகவே முடியும், இரண்டாம் பாகத்தில் அதை காதலுடன் சேர்த்து இன்னும் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன் படத்தை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 மாரி படத்தில் பணியாற்றிய அதே குழுவே, மாரி இரண்டாம் பாகத்திலும் பணியாற்ற இருக்கிறார்கள். விரைவில் மாரி-2 பற்றிய அறிவிப்பு வௌியாக இருக்கிறது.

 


Post your comment





Related News
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
இது மாரி செல்வராஜின் முதல் படம் அல்ல, முதல் கோபம்! சிஷ்யனுக்கு இயக்குநர் ராமின் வாழ்த்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions