ஜூலை 17 ரேஸிலிருந்து விலகியது மாரி.?!

Bookmark and Share

ஜூலை 17 ரேஸிலிருந்து விலகியது மாரி.?!

காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலாஜி மோகன்,அடுத்தப்படியாக துல்கர் சல்மானை வைத்து வாயை மூடி பேசவும் என்ற படத்தை இயக்கினார்.

வித்தியாசமான முயற்சியாக இந்தப்படம் இருந்தது. இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக தனுஷை வைத்து மாரி என்ற படத்தை இயக்கியுள்ளார். தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு கிடைத்துள்ளது. இதனிடையே மாரி படத்தினை ஜூலை 17ம் தேதி ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.

அன்றைய தினம் இரண்டு ஆண்டுகளாக ரிலீஸாவதாக சொல்லப்பட்டு வந்த சிம்புவின் வாலு படமும், சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படமும் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஜூலை 17ம் தேதி மும்முனை போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில் ஜூலை 17ம் தேதி ரேஸிலிருந்து மாரி விலகிவிட்டதாக தற்போது தவகல் வெளியாகியுள்ளது. மாரி  படத்தில் சில காட்சிகள் ரீ-ஷூட் எடுக்க வேண்டியிருப்பதால் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோவதாக கூறப்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயனும், சிம்புவும் மோத உள்ளனர்.


Post your comment





Related News
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
இது மாரி செல்வராஜின் முதல் படம் அல்ல, முதல் கோபம்! சிஷ்யனுக்கு இயக்குநர் ராமின் வாழ்த்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions