மாரி படத்திற்கு யு சர்டிபிகேட்!

Bookmark and Share

மாரி படத்திற்கு யு சர்டிபிகேட்!

காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடிப் பேசவும் படங்களுக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கியுள்ள படம் மாரி. தனுஷ், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு அனைவரும் பார்க்கும்படியான யு சான்றிதழ் கிடைத்துள்ளது. ஒரு ரவுடியைப் பற்றிய கதைதான் என்பதை டிரைலரைப் பார்க்கும் சின்னக் குழந்தை கூட சொல்லிவிடும்.

ஏற்கெனவே இந்தப் படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டிரைலரின் கடைசியில் தனுஷ் சொல்லும் டயலாக்கான செஞ்சுருவேன் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல இந்தப் படத்தின் டிரைலரை ரஜினிகாந்த் வெர்ஷன், விஜயகாந்த் வெர்ஷன், பிரேம்ஜி வெர்ஷன் என பல விதங்களில் ரசிகர்கள் உருவாக்கி யு டியூபில் உலவ விட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்தில் கொக்கி குமார் கதாபாத்திரத்தில் நடித்த தனுஷ் அதன் பிறகு பல அதிரடிக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் மாரி கதாபாத்திரத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 


Post your comment





Related News
மாரி-2 படத்தில் இணைந்த மெகா ஹிட் நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
தனுஷின் மாரி படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு
மாரி தனுஷ் புறா ரேஸர்
மாரி ஆடியோ ரிலீஸ் தள்ளி வைப்பு ஏன்?
\'மாரி\' டீசர், தனுஷை கண்டிக்கப் போவது யார் ?
\'மாரி\' ஆடியோ ரிலீஸ் ஒத்திவைப்பு
மே 25 முதல் மாரி இசை
\'மாரி\' மீசையை இழக்கப்போகும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions