மே 25 முதல் மாரி இசை

Bookmark and Share

மே 25 முதல் மாரி இசை

காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் அடுத்தப் படமாக வாயை மூடி பேசவும் என்ற படத்தை இயக்கினார். துல்கர் சல்மான் - நஸ்ரியா இப்படம் படு தோல்வியடைந்தது.

வாயை மூடி பேசவும் படம் தயாரிப்பில் இருந்தபோது,

பாலாஜி மோகன் சொன்ன கதையைக் கேட்டு அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார் தனுஷ். வாயை மூடி பேசவும் படு தோல்வியடைந்தாலும் ஏற்கனவே கொடுத்த வாக்கின்படி  பாலாஜி மோகனுக்கு கால்ஷீட் கொடுத்து தனுஷ் நடித்து வரும் படம் 'மாரி'.  

சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன் ஆகியோர் இணைந்து 'மேஜிக் ஃப்ரேம்ஸ்' நிறுவனம் சார்பில் தயாரித்து வரும் படம் இது. 'மாரி' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.  

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட்புரடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அனிருத் இசை அமைக்கும் இப்படத்தின் ஆடியோவை இம்மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.  

இதனை தொடர்ந்து 'மாரி' படத்தை ஜூலை 17-ஆம் தேதி ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.  இதனை தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் மற்றும் தனுஷ் தங்களது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளனர். இனி கொஞ்சகாலத்துக்கு ட்விட்டரில் மாரி புராணமாகத்தான் இருக்கும்...


Post your comment





Related News
மாரி-2 படத்தில் இணைந்த மெகா ஹிட் நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
மாரி படத்திற்கு யு சர்டிபிகேட்!
தனுஷின் மாரி படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு
மாரி தனுஷ் புறா ரேஸர்
மாரி ஆடியோ ரிலீஸ் தள்ளி வைப்பு ஏன்?
\'மாரி\' டீசர், தனுஷை கண்டிக்கப் போவது யார் ?
\'மாரி\' ஆடியோ ரிலீஸ் ஒத்திவைப்பு
\'மாரி\' மீசையை இழக்கப்போகும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions