'மாரி' மீசையை இழக்கப்போகும் தனுஷ்

Bookmark and Share

'மாரி' மீசையை இழக்கப்போகும் தனுஷ்

'அனேகன்' படத்தைத் தொடர்ந்து பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி' படப்பிடிப்பில் கடந்த இரண்டு மாதங்களாக பிஸியாக நடித்து வந்தார் தனுஷ். மாரி படத்தில் அவருக்கு வடசென்னை தாதா கேரக்டர்.

எனவே முறுக்கு மீசை, குறுந்தாடி என 'மாரி' யாக மாறி இருந்தார் தனுஷ். மாரி படத்தில் அவருக்கு ஜோடி காஜல் அகர்வால். அனிருத் இசையமைக்கும் மாரி படத்தின் படப்பிடிப்பு நேற்றோடு முடிவடைந்து பூசணிக்காய் உடைத்துவிட்டனர். மாரி படப்பிடிப்பு நிறைவடைந்த தகவலை  தனுஷ் ட்வீட் செய்திருக்கிறார்.

அதோடு 'மாரி' மீசையை இழக்க வேண்டிய நேரம் வந்திருப்பதாகவும் காமெடியாகக் கூறியிருக்கிறார். மாரிக்கு அடுத்து தனுஷின் அவதாரம் என்ன?மீண்டும் 'விஐபி' கெட்அப்புக்கு மாறுகிறாராம்.

'மாரி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இன்னும் சில தினங்களில் படத்தின் எடிட்டிங், டப்பிங், போஸ்ட்புரொடக்ஷன் வேலைகள் துவங்க உள்ளன. அதேநேரம், வரும் 20ஆம் தேதி முதல் வேல்ராஜ் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி பார்ட் - 2 படத்தின் படப்பிடிப்பும் தொடங்குகிறது.

இந்தப் படத்துக்கு அனிருத்தே இசையமைப்பாளர்.  இப்படத்தில் எமி ஜாக்ஸன், சமந்தா என இரண்டு ஹீரோயின்கள் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள்.

வேலையில்லா பட்டதாரி பார்ட் - 2 படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் பிரபுசாலமன் இயக்க உள்ள படத்திலும், ஹிந்தியில் தனது 3வது படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ளார் தனுஷ். உண்மையிலேயே தனுஷ் காட்டுல மழைதான்.


Post your comment





Related News
மாரி-2 படத்தில் இணைந்த மெகா ஹிட் நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
மாரி படத்திற்கு யு சர்டிபிகேட்!
தனுஷின் மாரி படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு
மாரி தனுஷ் புறா ரேஸர்
மாரி ஆடியோ ரிலீஸ் தள்ளி வைப்பு ஏன்?
\'மாரி\' டீசர், தனுஷை கண்டிக்கப் போவது யார் ?
\'மாரி\' ஆடியோ ரிலீஸ் ஒத்திவைப்பு
மே 25 முதல் மாரி இசை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions