மாரி ஆடியோ ரிலீஸ் தள்ளி வைப்பு ஏன்?

Bookmark and Share

மாரி ஆடியோ ரிலீஸ் தள்ளி வைப்பு ஏன்?

அனேகன் படத்தை அடுத்து தனுஷ் நடித்து வரும் படம் மாரி. தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் இப்படத்தை தனுஷின் வுண்ட்பார் நிறுவனமும், ராதிகாவின் மேஜிக் ஃபேரம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் ஆகிய படங்களைத் தொடர்ந்து பாலாஜி மோகன் இப்படத்தை இயக்கி உள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள மாரி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் படத்தின் ஆடியோவை இம்மாதம் 25 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள்!  ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் படத்தின் ஆடியோ வெளியீட்டு மற்றும் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

அதோடு, ஆடியோவை அடுத்த மாதம் (ஜூன்) 4-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.  ஏன்.. தள்ளி வைப்பு? ஃபைனல் மிக்ஸிங் முடித்து அனிருத் இன்னும் டாட் கொடுக்காததுதான் ஆடியோ ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதற்கான காரணமாம்.

இப்படத்தின் ஆடியோவை உரிமையை பெற்றுள்ள சோனி நிறுவனம் இதனால் அப்செட் என்றும் கேள்வி. மாரி படத்தை ஜூன் மாதம் 17ஆம் தேதி வெளியிட இருந்தனர். ஆடியோ ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதால் பட ரிலிஸ் தள்ளிப்போகும் என்று சொல்லப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions