'மாரி' டீசர், தனுஷை கண்டிக்கப் போவது யார் ?

Bookmark and Share

'மாரி' டீசர், தனுஷை கண்டிக்கப் போவது யார் ?

'வேலையில்லா பட்டதாரி' படம் வெளிவந்த சமயத்திலேயே அந்தப் படத்தில் புகை பிடிப்பது போன்ற போஸ்டரை படத்தின் விளம்பரத்திற்கு தனுஷ் பயன்படுத்தியதற்கு பலத்த எதிர்ப்பு வந்தது.

இப்போது மீண்டும் 'மாரி' படத்தின் டீசரில் புகைப் பிடிப்பது போன்ற காட்சி மட்டுமே படத்தின் டீசராக வெளியிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை அதிகமாக வைத்திருந்த தனுஷின் மாமனார் ரஜினிகாந்தே அப்படிப்பட்ட காட்சிகளை அவருடைய படங்களில் இடம் பெறுவதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டார். விஜய் போன்ற சில ஹீரோக்களும் தங்களது படங்களில் அப்படி புகை பிடிக்கும் காட்சிகளை வைப்பதை தவிர்த்து வருகிறார்கள்.

ஆனால், தனுஷ் தன்னுடைய படங்களில் தொடர்ந்து புகை பிடிக்கும் காட்சிகளை வைத்து வருவதை சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்த்து வருகிறார்கள். நேற்று யு டியூபில் வெளியிடப்பட்ட 'மாரி' படத்தின் டீசரின் கமெண்ட் பக்கங்களிலேயே பலரும் தனுஷின் புகை பிடிப்புக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புகை பிடிப்பது மட்டுமே ஆண்மைக்கான ஒரு அடையாளம் போல தனுஷும், அந்தப் படத்தின் இயக்குனரும் வெளிக்காட்டியிருப்பது கண்டிக்க வேண்டிய ஒன்று. கையில் சிகரெட் இல்லாமலே தனுஷ் நடந்து வந்தாலே அந்த டீசர் நன்றாக இருக்கும்.

ஆனால், எதையாவது காட்டி ஹீரோயிசத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் அந்தப் படத்தின் இயக்குனரும், தனுஷும் அந்தக் காட்சியை வைத்திருப்பது சரியல்ல.

உடனடியாக அந்த டீசரை அவர்கள் திரும்பப் பெறுவது இந்த சமூகத்திற்கும் அவரைத் தொடரும் இளம் ரசிகர்களுக்கும் செய்யும் நல்ல விஷயமாக இருக்கும். தனக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை தனுஷ் போன்ற தேசிய விருது பெற்ற நடிகர்கள் உணர வேண்டும்.


Post your comment





Related News
மாரி-2 படத்தில் இணைந்த மெகா ஹிட் நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
மாரி படத்திற்கு யு சர்டிபிகேட்!
தனுஷின் மாரி படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு
மாரி தனுஷ் புறா ரேஸர்
மாரி ஆடியோ ரிலீஸ் தள்ளி வைப்பு ஏன்?
\'மாரி\' ஆடியோ ரிலீஸ் ஒத்திவைப்பு
மே 25 முதல் மாரி இசை
\'மாரி\' மீசையை இழக்கப்போகும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions