தனுஷின் மாரி படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு

Bookmark and Share

தனுஷின் மாரி படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மாரி’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். ‘வாயை மூடி பேசவும்’ படத்தை இயக்கிய பாலாஜி மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி வருகின்றது. ரசிகர்களின் வரவேற்பால் சந்தோஷத்தில் இருக்கும் படக்குழுவினர், படத்தை ஜூலை 17ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

ஆனால், அதற்கு முன்னதாக இப்படத்தின் டிரைலரை ஜூன் 25ம் தேதி மாலை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே பாடல்களை கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு இந்த டிரைலரும் உற்சாகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions