காஜல் அகர்வாலின் பயத்தைப் போக்கிய 'மாரி'

Bookmark and Share

காஜல் அகர்வாலின் பயத்தைப் போக்கிய 'மாரி'

பெண்களுக்குப் பொதுவாக கரப்பான் பூச்சிகளைக் கண்டால்தான் பயமாக இருக்கும். ஆனால், நடிகை காஜல் அகர்வாலுக்குப் பறவைகள் என்றால் தான் பயமாம். அந்த பயத்தை தனுஷுடன் ஜோடியாக நடிக்கும் 'மாரி' திரைப்படம் போக்கிவிட்டதாம். பறவைகளின் மீது தனக்கிருந்த பயம் போனதைக் கண்டு காஜல் அகர்வால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

'மாரி' படம் எனக்கு பறவைகள் மீதான பயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு உதவியுள்ளது. குறிப்பாக புறாக்கள் என்றால் எனக்கு அதிக பயம். ஆனால், 'மாரி' படத்தில் நடிக்க ஆரம்பித்த பின் புறாக்களை என் கையிலேயே தூக்கும் அளவிற்கு பயம் போய்விட்டது.

ஒரு வழியாக அப்படிப்பட்ட ஒரு பயத்திலிருந்து மீண்டு வந்துவிட்டேன். தனுஷும் நானும் ஏற்கெனவே 'பொல்லாதவன்' படத்தில் சேர்ந்து நடித்திருக்க வேண்டியது. அதற்காக போட்டோ ஷுட்டெல்லாம் கூட எடுத்தேன்.

ஆனால், தெலுங்குப் படம் ஒன்றில் நடித்ததால் ஏற்பட்ட தேதிப் பிரச்சனையில் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. தனுஷ், ஒரு மிகச் சிறந்த நடிகர். திறமைசாலி ஒருவருடன் நாமும் ஜோடி சேர்ந்து நடிக்கும் போது நம்மிடமும் ஒரு உத்வேகம் வரும்.

நிச்சயம் 'மாரி' படம் எனக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும். இயக்குனர் பாலாஜி மோகன் புதுமையான கண்ணோட்டத்துடனும், சினிமாவை வேறு ஒரு பார்வையிலும் பார்க்கும் இயக்குனராக இருக்கிறார்,” என 'மாரி' படம் பற்றி மனம் திறந்து பாராட்டுகிறார் காஜல் அகர்வால்.


Post your comment





Related News
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions