மரியான் டீஸரை காப்பியடித்த மாரி டீஸர்

Bookmark and Share

மரியான் டீஸரை காப்பியடித்த மாரி டீஸர்

இளம் இயக்குநர்கள் சிலருக்கு க்ரியேட்டிவிட்டியும் குறைந்துகொண்டே வருகிறது. கதை மட்டுமல்லாது, போஸ்டர் டிசைன் உட்பட எல்லாவற்றையும் காப்பியடிக்க ஆரம்பித்துவிட்டனர். லேட்டஸ்ட்டாக இப்படி ஒரு விமர்சனம் மாரி படத்தை இயக்கும் பாலாஜி மோகன் மீது எழுந்திருக்கிறது. அனேகன் படத்திற்குப் பிறகு  இவரது இயக்கத்தில் மாரி படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். 

வடசென்னை ஏரியா தாதாவாக தனுஷ் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார்.  படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மாரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர்  கடந்த மாதம் யூடியூப்பில் வெளியானது. 33 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த டீஸரில், அதிரடியான பின்னணி இசை ஒலிக்க, சிகரெட் புகைத்தபடி ஸ்லோமோஷனில் தனுஷ் அறிமுகமாகிறார். மாரி டீஸரில் இந்த ஒரு ஷாட் மட்டுமே இடம்பெற்றுள்ளது. 
தனுஷ் நடிப்பில் ஏற்கனவே வெளியான மரியான் படத்தின் 3வது டீஸரும் இதேபோல்தான் இருந்தது. அதில் பீடியைப் புகைத்தபடி தனுஷ் வீட்டிற்குள்ளிலிருந்து வெளியே வருவார்.  

இந்த மாரி டீஸரில் பீடிக்கு பதில் சிகரெட்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions