மாரியில் ரோபோ ஷங்கரின் காமெடி தர்பார்!

Bookmark and Share

மாரியில் ரோபோ ஷங்கரின் காமெடி தர்பார்!

சின்னத்திரை தொகுப்பாளர்களான சிவகார்த்திகேயன், மா.கா.பா.ஆனந்த உள்பட பலர் ஹீரோக்களாகிக் கொண்டிருக்கும் நிலையில், டிவி காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த ரோபோ ஷங்கரும் தற்போது பல படங்களில் காமெடியனாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

குறிப்பாக, காதலில் சொதப்புவது எப்படி படத்தை அடுத்து மம்மூட்டியின் மகன் துல்கர்சல்மான்- நஸ்ரியா நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய படம் வாயை மூடி பேசவும். இந்த படத்தில் குடிகாரர்களின் சங்கத்தலைவராக நடித்த ரோபோ ஷங்கர் படம் முழுக்க வயிறு குலுங்க சிரிக்கும் அளவுக்கு காமெடி செய்திருந்தார்.

அதனால், அதற்கடுத்து தனுஷை வைத்து தான் இயக்கியுள்ள மாரி படத்திலும் அவரையே காமெடியனாக்கி விட்டார் பாலாஜி மோகன்.

அதனால் இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தானும் ஒரு ஷோலோ காமெடியனாகிவிட வேண்டும் என்று தனது மொத்த காமெடி திறமையையும் கொட்டி நடித்திருக்கிறாராம் ரோபோ ஷங்கர்.

குறிப்பாக, மாரி படத்தின் வரவுக்குப் பிறகு அவரும் தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியன்களில் ஒருவராகி விடுவார் என்கிறார்கள்.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions