'மாஸு என்கிற மாசிலாமணி' 2 மணி நேரம் 32 நிமிடம் ஓடும்...!

Bookmark and Share

'மாஸு என்கிற மாசிலாமணி' 2 மணி நேரம் 32 நிமிடம் ஓடும்...!

சூர்யா, நயன்தாரா, பிரணீதா, பிரேம்ஜி மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸு என்கிற மாசிலாமணி' படம் 2 மணி நேரம் 32 நிமிடம் ஓடும் அளவில் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சமீபத்தில் தணிக்கை நடைபெற்றது.

அப்போது படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான 'யு' சான்றிதழ் வழங்கினார்கள். அதனால் உடனடியாக படத்தின் பெயரை 'மாஸ்' என்பதிலிருந்து 'மாஸு என்கிற மாசிலாமணி' என மாற்றிவிட்டார்கள்.

தமிழக அரசின் வரி விலக்கை பெறவே இந்த மாற்றம் செய்யப்பட்டது. பேய்ப் படம் என்பதால் எப்படியும் 'யு-ஏ' சான்றிதழ்தான் கிடைக்கும் என்று படக்குழுவினர் நினைத்ததால்தான் முதலில் 'மாஸ்' என ஆங்கிலத் தலைப்பு வைத்திருந்தார்கள்.

அதற்கு 'மாசிலாமணி' என்பதன் சுருக்கம்தான் 'மாஸ்' என்றும் விளக்கம் சொன்னார்கள். ஆனால், 'மாசிலாமணி' என்பதன் சுருக்கத்தை 'மாசி அல்லது மாசு' என்று வேண்டுமானால் அழைக்கலாம்.

இருந்தாலும் 'மாஸு என்கிற மாசிலாமணி' என்றே இன்று வரை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்னவர் வரை டிவிட்டர், ஃபேஸ்புக் வலைத்தளங்களில் கூட 'Masss' என்றே குறிப்பிட்டு வந்த படக்குழுவினர் நேற்றிலிருந்து 'Massu Engira Masilamani' என்று போட ஆரம்பித்துவிட்டார்கள். 'மாஸு' எவ்வளவு 'காஸு' அள்ளும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.


Post your comment





Related News
லிங்கா போன்று எழும் மாசிலாமணி பிரச்சனை
அண்ணன் பட நஷ்டத்தை ஈடுகட்டிய தம்பி படம்
தமிழ் நடிகர்களை தெலுங்கு மீடியாக்கள் வெறுக்கிறதா ...?
டோலிவுட்டிலும் வரவேற்பு பெற்ற மாசு
மஸ்கட்டிலும் வெளியானது மாசு....
மாசு படத்தில் ஈழத்தமிழனாக வரும் சூர்யா
டோலிவுட்டிலும் பிரமாண்டமாக வெளிவரும் மாசு
தூக்கு தண்டனை வேண்டும்: ஷாம் கருத்து
புறம்போக்கின் இந்திய திரையரங்கு உரிமையை வாங்கிய மன்னன் ஃபிலிம்ஸ்
மே 15ஆம் தேதி வெளியாகும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை\'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions