மாவீரன் கிட்டு நிறைய தேசிய விருதுகளை பெற்று தரும்: பார்த்திபன் நம்பிக்கை

Bookmark and Share

மாவீரன் கிட்டு நிறைய தேசிய விருதுகளை பெற்று தரும்: பார்த்திபன் நம்பிக்கை

'வெண்ணிலா கபடி குழு', 'ஜீவா' படங்களுக்குப் பின் சுசீந்திரன்-விஷ்ணு விஷால் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'மாவீரன் கிட்டு'. இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னை லயோலா கல்லூரியில் இன்று மாலை நடைபெற்றது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் சமுத்திரகனி வெளியிட படத்தின் டீசரை இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டார்.  விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில் " 'அழகர் சாமியின் குதிரை' திரைப்படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதேபோல் 'மாவீரன் கிட்டு' திரைப்படத்துக்கும் எனக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார். விழாவில் நாயகன் விஷ்ணு விஷால் பேசியபோது "நான் இப்படத்தின் மூலம் இயக்குநர் சுசீந்திரன் அவர்களுடன் மூன்றாவது படத்தில் இணைகிறேன். இப்படம் நிச்சயம் உங்கள் மனதை தொடும் ஒரு படமாக இருக்கும்’’ என்றார்.

இயக்குநர் சமுத்திரகனி பேசியது "இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது எனக்கு மாபெரும் போராளி மாவீரன் திலீபன் அவர்கள்தான் நினைவுக்கு வருகிறார். இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தின் மூலம் அழுத்தமான ஒரு பதிவை தமிழ் சினிமாவுக்கு வழங்குவார் என்று நினைக்கிறேன்" என்றார். 

இயக்குநர் பா.ரஞ்சித் பேசியது, ‘‘இப்படத்தின் டீசரை பார்க்கும்போது சமூகத்துக்கு தேவையான முக்கியமான ஒரு படைப்பை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார் என்பது தெரிகிறது. இப்படத்தை பார்க்கும்போது நாயகன் ஏதோ ஒரு முக்கிய சமூக பிரச்சனைக்காக போராடுவதுபோல் தோன்றுகிறது" என்றார். 

விழாவில் இயக்குநர் நடிகர் பார்த்திபன் பேசுகையில்" 'ஆயிரத்தில் ஒருவன்' , 'அழகி' திரைப்படத்தைப் போன்று இப்படம் எனக்கு கண்டிப்பாக நல்ல பெயர் வாங்கி தரும். ஏனென்றால் என்னுடைய கதாபாத்திரம் அப்படி. 'ஹவுஸ்புல்' திரைப்படத்துக்கு பின் இப்படத்துக்காக நான் நிறைய விருதுகளை வாங்குவேன் என நம்புகிறேன்" என்றார். 


Post your comment





Related News
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions