மாவீரன் கிட்டுவால் விஷ்ணு மகா விஷ்ணுவாகி விடுவார் : பார்த்திபன் பேச்சு

Bookmark and Share

மாவீரன் கிட்டுவால் விஷ்ணு மகா விஷ்ணுவாகி விடுவார் : பார்த்திபன் பேச்சு

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், பார்த்திபன், ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாவீரன் கிட்டு’. இப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. 

இதில் இயக்குநர் சுசீந்திரன், விஷ்ணு விஷால், பார்த்திபன், ஸ்ரீ திவ்யா, தயாரிப்பாளர் சந்திரசாமி, தாய் சரவணன், இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.சூர்யா, எழுத்தாளர் – கவிஞர் யுகபாரதி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, இயக்குநர் பா.ரஞ்சித், பாண்டி ராஜ், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் நடிகர் பார்த்திபன் பேசும்போது, இக்காலத்தில் சினிமா ரசிகர்கள் அனைவரும் சினிமாவை மிகவும் கவனமாக பார்க்கிறார்கள். நாம் சின்ன தவறு செய்தால்கூட அதை கண்டுபிடித்துவிடுகிறார்கள். உதாரணத்துக்கு “நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் ‘தொடரி’ திரைப்படத்தில் 150 கி.மீ. வேகத்தில் செல்லும் இரயிலில் கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் தூக்கவில்லை என்ற ஓர் விஷயம் ரசிகர்களால் வாட்ஸ்அப்பில் பகிரப்படுகிறது. 

இயக்குநர் சுசீந்திரன் எப்போதும் மிகவும் சரியாக படத்தை இயக்கும் ஓர் இயக்குநர். இயக்குநர் பிரபுதேவா ஒரு நாயகிக்கு நடனம் கற்று கொடுக்க இரண்டு நாள், அதை சரியாக கொண்டுவருவதற்கு 8  நாள் ஆகும் என்று கூறினார். அதே போல் எல்லாம் சரியாக வருவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர் சுசீந்திரன். 

இப்படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யா மிகச்சிறந்த நடிகை என்று கூறலாம். ஏனென்றால் நான் அழவேண்டிய காட்சியில் இயக்குநர் சுசீந்திரன் ஸ்ரீதிவ்யாவை கிளிசரின் போடுமாறு கூறியதும் அவர் மறுப்பேதும் கூறமால் அக்காட்சி நன்றாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் முகம் பிரேமில் வராது என்று தெரிந்தும் நடித்தார். இவ்வாறு படத்தில் நாயகன் விஷ்ணு விஷால் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்தார்கள். இப்படத்துக்கு பின்னர் விஷ்ணு மகா விஷ்ணுவாக மாறிவிடுவார் என்றார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions