தமிழில் மாயா, தெலுங்கில் மயூரி

Bookmark and Share

தமிழில் மாயா, தெலுங்கில் மயூரி

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நம்பர் 1 நாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் நயன்தாரா, சில காதல்கள், உள்ளிட்ட பிரச்னைகள் இவரின் வாழ்க்கையில் புயல் வீச சினிமா வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தவரை மீண்டும் நடிக்க வாங்க என்று அழைத்து வந்தார் தமிழ் பட இயக்குநர் ஒருவர்.

அதன்பின் இவருக்கு எங்கிருந்துதான் யோகம் வந்ததென்றே தெரியவில்லை, இவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட் லிஸ்டில் சேர்ந்து கொண்டே போக இவரின் சம்பளமும் பல மடங்கு எறிக் கொண்டே போனது, ஆனாலும் இவர் கேட்கும் சம்பளத்தை தர தயங்கவில்லை தயாரிப்பாளர்கள்.

தற்போது அறிமுக இயக்குநர் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் தமிழில் “மாயா” என்ற ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா, இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பமானது, தமிழில் மாயா என்ற பெயரில் வெளியாகும் இந்த படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு “மயூரி” என்ற பெயரில் வெளியாகவுள்ளதாம், இப்படத்தில் நயன்தாராவுடன் நெடுஞ்சாலை ஆரியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏப்ரல் முதல் வாரத்தில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions