“மதகஜ ராஜா, பூலோகம்” எப்பதான் வரும்...?

Bookmark and Share

“மதகஜ ராஜா, பூலோகம்” எப்பதான் வரும்...?

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்களின் படங்கள் முடிவடைந்து சில வருடங்களோ, பல மாதங்களோ ஆகியும் வெளிவராமல் இருக்கும் சூழ்நிலை அவர்களுடைய வளர்ச்சிக்கே மிகவும் ஆபத்தான ஒன்று.

அப்படி இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் எப்போது வெளிவரும் என்று தெரியாத அளவிற்கு தொடர்ந்து வராமல் இருப்பது பரிதாபத்துக்குரிய விஷயம்தான். சிறிய படங்களைத் தயாரிப்பவர்கள் கூட அவர்களது படங்கள் எப்படியாவது வெளிவந்துவிட வேண்டுமென்றுதான் நினைப்பார்கள்.

ஆனால், விஷால் நடித்த 'மதகஜ ராஜா', ஜெயம் ரவி நடித்த 'பூலோகம்' ஆகிய படங்கள் முடிவடைந்து ஒரு குறிப்பிட்ட தேதியில் வெளிவருகிறது என்று அறிவிக்கப்பட்டும் வெளிவராமல் இருப்பதை என்னவென்று சொல்வது.

இரண்டு படங்களுமே தயாரிப்பாளர்களின் பிரச்சனைகளால்தான் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. 'மதகஜ ராஜா' படத்தை எடுத்தவர்களால் முந்தைய படங்களின் பிரச்சனையால் அந்தப் படத்தை வெளியிட முடியாமல் இருக்கிறது. 'பூலோகம்' படத்தைத் தயாரித்தவர்கள்தான் 'ஐ' படத்தையும் தயாரித்து வெளியிட்டுள்ளார்கள்.

'ஐ' படமும் தயாரிப்பாளருக்கு நிறையவே லாபத்தைப் பெற்றுத் தந்துள்ளது என்றுதான் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் படங்கள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு, அந்தக் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாமல்  தள்ளிப் போய், நீண்ட நாட்கள் கழித்து வெளியானால் பெரிய வெற்றியைப் பெறாது என்ற ஒரு சென்டிமென்ட் உள்ளது.

ஆனால், அந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் ஆகியோருக்கு அதனால் எவ்வளவு வருத்தம் இருக்கும் என்று பார்க்க வேண்டும். 'பூலோகம்' படத்தைப் பொறுத்தவரையில் அப்படத்தின் மூலம் கல்யாணகிருஷ்ணன் இயக்குனராக அறிமுகமாக வேண்டும்.

தான் இயக்கிய முதல் படம் இவ்வளவு நாள் தள்ளிப் போனால் அவருடைய தவிப்பு எப்படி இருக்கும் என்பதை சொல்லவே வேண்டாம். இந்த இரண்டு படங்கள் உதாரணம் மட்டுமே...ஆனால், இப்படி பல படங்கள் வெளியாகாமல் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றை திரையுலகம் சம்பந்தப்பட்டவர்கள் விசாரித்து அவை வெளியாவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான் ரசிர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions