இந்த படமெல்லாம் உங்களுக்கு நியாபகம் உள்ளதா? ஸ்பெஷல்

Bookmark and Share

இந்த படமெல்லாம் உங்களுக்கு நியாபகம் உள்ளதா? ஸ்பெஷல்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தை எடுப்பது கூட எளிது தான், ஆனால், அதை ரிலிஸ் செய்வது தான் மிகவும் கஷ்டம். அந்த வகையில் படங்கள் முடிந்தும் பல வருடமாக பெட்டியில் தூங்கும் படங்கள் எது என்று பார்ப்போம்.

மதகஜராஜா

விஷால், சுந்தர்,சி என பிரமாண்டமாக தொடங்கி ட்ரைலர் கூட ஹிட் அடித்தது, ஆனால், ஜெமினி நிறுவனத்துடன் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இந்த படம் வெளிவரவே இல்லை, விஷால் இந்த படத்தில் குறைந்தது 10 முறையாவது ரிலிஸ் தேதியை அறிவித்திருப்பார்.

இரண்டாவது படம்

தமிழ் படம் என்ற வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதை ஹிட் அடித்து அமுதன் தன் இரண்டாவது படத்திற்கு, இரண்டாவது படம் என்றே தலைப்பு வைத்து ஒரு படத்தை இயக்கினார், விஜய்-அஜித் மோதல் குறித்து இந்த படம் இருக்கும் எனவும் கிசுகிசுக்கப்பட்டது, காரணமேட் தெரியவில்லை படம் மட்டும் வெளிவரவே இல்லை.
இடம் பொருள் ஏவல்

சீனுராமசாமி-விஜய் சேதுபதி இருவரும் அடுத்த ரவுண்ட் கிளம்பி தர்மதுரை என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டனர், ஆனால், இன்றுவரை இவர்கள் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல் வெளிவரவில்லை, யுவனின் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

வா டீல்

அருண் விஜய் என்னை அறிந்தால் படத்திற்கு முன்பே தயாரான படம், என்னை அறிந்தாலுக்கு பிறகு ரிலிஸ் செய்யலாம் என எண்ணினார்கள், ஆனால், அந்த படத்தின் இயக்குனர் றெக்க என்ற படத்தை எடுத்து முடித்துவிட்டார், அருண் விஜய் நடிப்பில் விரைவில் குற்றம்23 வரவுள்ளது, ஆனால் வா டீல் வருமா? என்று தெரியவில்லை.

சிப்பாய்

கௌதம் கார்த்திக்கின் இரண்டாவது படமே இது தான், லட்சுமி மேனன், யுவன் ஷங்கர் ராஜா என பிரமாண்டமாக தொடங்கிய படம் பெட்டிக்குள் தூங்கி பல வருடமாகிவிட்டது.

அர்ஜுனின் காதலி

ஜெய, பூர்ணா நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு தொடங்கிய படம் அர்ஜுனின் காதலி, இசை தேவா என பெயர் போட்டு பிறகு ஸ்ரீகாந்த் தேவா வரை வந்துவிட்டார்கள், படம் இந்த வருடம் வருவதாக கூறியுள்ளார்கள், பார்ப்போம்.

காதல்2கல்யாணம்

ஆர்யாவின் தம்பி, குத்து ரம்யா என முகம் தெரிந்த பிரபலங்களுடன் படம் தொடங்கி ரிலிஸ் வரை வந்து இன்னும் வெளிவராமல் இருக்கின்றது, இந்த படத்திலும் யுவன் இசையில் அனைத்தும் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனவை குறிப்பிடத்தக்கது.

வசந்தகுமரன்

விஜய் சேதுபதி நடிப்பில் வசந்தகுமரன் பல பிரச்சனைகளை சந்தித்தது, இப்படத்தின் இயக்குனர் தான் தற்போது புலம்பி வருகிறார், சண்டைப்போட்ட விஜய் சேதுபதி, ஆர்.கே.சுரேஷ் எல்லாம் நட்பாகி அடுத்தப்படத்திற்கு சென்றுவிட்டனர், படம் என்ன ஆனது என்று தெரியவில்லை.


Post your comment

Related News
காவ்யாமாதவனை 2-ம் திருமணம் செய்தது ஏன்? திலீப் பேட்டி
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
ஆர்.கே. நகரை உன்னிப்பாக கவனிப்போம்- பிரபல நடிகரின் டுவிட்
பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்
ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்
விக்ரம் பிரபு ஜோடியாகும் பிந்து மாதவி
எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி
பிரபல நடிகைக்கு இயக்குனர் முதல் உதவி இயக்குனர் வரை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்களா? அவரே சொல்கிறார்
விஜய் சேதுபதி மாதவன் கூட்டணிக்கு ரசிகர்களின் வரவேற்பு என்ன தெரியுமா?
இதுதான் சரியான நேரம்! தமிழக மக்களுக்கு மாதவன் வேண்டுகோள்About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions