பட அதிபர் மதனை கண்டுபிடிக்கும்படி மனைவி மனு!

Bookmark and Share

பட அதிபர் மதனை கண்டுபிடிக்கும்படி மனைவி மனு!

வேந்தர் மூவிஸ் என்ற பெயரில் சினிமா பட நிறுவனம் நடத்தி வந்தவர் எஸ்.மதன். சினிமாப்பட வினியோகஸ்தராகவும் அவர் செயல்பட்டார். பட அதிபர் மதன் கடந்த 27-ந்தேதியில் இருந்து மாயமாகி விட்டார்.

வீட்டை விட்டு வெளியேறிய அவர், பரபரப்பான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார். கடிதத்தில், நான் வாரணாசியில் கங்கையில் சமாதி ஆகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவர் தற்கொலை முடிவில் கடிதம் எழுதி வைத்து விட்டு சென்றிருக்கலாம் என்று பேசப்பட்டது. அவரை தேடி அவரது குடும்பத்தினர் வாரணாசி சென்றுள்ளனர்.

அவரது தாயார் தங்கம் மற்றும் மனைவி சுமலதா ஆகியோர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து மதனை கண்டுபிடிக்கும்படி மனு கொடுத்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரிகளில் சீட் வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக இன்னொரு திடுக்கிடும் புகார் மனு பிரபல கல்வி நிறுவனம் சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்றும் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மதனின் இன்னொரு மனைவி சிந்து என்பவரும் புதிய புகார் மனுவுடன் கமிஷனர் அலுவலகம் வரப்போவதாக நேற்று மாலை தகவல்கள் பரவியது. ஆனால் அவர் நேற்று இரவு வரை புகார் எதுவும் கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கவில்லை.

பட அதிபர் மதன் காணாமல் போன விவகாரம் இதுபோன்ற புகார்களுடன் விசுவரூபம் எடுத்துள்ளது.

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் மதன் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் பலமுறை கூறியிருக்கிறார். மதன் மூலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் போலீசாரை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எந்தவித தொடர்பும் இன்றி தன்னிச்சையாக மதன் என்பவர் செய்துள்ள மோசடிகளுக்கும், எமது நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அதே சமயம் சட்டரீதியாக நாங்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
பட அதிபர் மதன் மீண்டும் கைது
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்
ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்
எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions