என் கணவர் காணாமல் போனதற்கு காரணமானவர்களை பிடிக்க வேண்டும்: மதனின் மனைவி பேட்டி

Bookmark and Share

என் கணவர் காணாமல் போனதற்கு காரணமானவர்களை பிடிக்க வேண்டும்: மதனின் மனைவி பேட்டி

சினிமா பட அதிபர் மதன் தற்கொலை செய்யப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு திடீரென்று தலைமறைவாகி விட்டார். அவர் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமா வட்டாரத்திலும் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது. மதனின் 2-வது மனைவி சுபலதா நேற்று முன்தினம் தனது கணவரை கண்டுபிடிக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.

நேற்று மதனின் முதல் மனைவி சிந்து கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து கண்ணீர் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

காணாமல் போன எனது கணவர் மதனை கண்டுபிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 1996-ம் ஆண்டு எனக்கும் அவருக்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு பிளஸ்-1 படிக்கும் வேதிகா என்ற மகள் இருக்கிறாள். அவர் காணாமல் போனதை அடிப்படையாக வைத்து பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. 

பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் தவறான தகவல்கள் செய்திகளாக வெளிவருகின்றன. அவர் பண மோசடி செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக அவதூறு பரப்புகிறார்கள். மோசடி செய்யும் அளவுக்கு அவர் மோசமானவர் அல்ல.

எஸ்.ஆர்.எம்.கல்விக்குழுமத்தின் தலைவர் பச்சமுத்துவிற்கு எனது கணவர் மிகவும் நெருக்கமாக இருந்தார். இது சிலருக்கு பிடிக்கவில்லை.

இதனால் அவருக்கு மிரட்டல்கள் வந்தன. அந்த மிரட்டலும் சிலரது தூண்டுதலும்தான், எனது கணவர் காணாமல் போனதற்கு காரணமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். இது தொடர்பாக உண்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

சிந்துவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. கண்ணீர் விட்டு அழுதபடியே இருந்தார். அவருடன் வந்த வக்கீல் மட்டுமே நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

பட அதிபர் மதனின் பி.எம்.டபிள்யூ கார் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் விமானத்தில் ஏறி டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்துள்ளார். அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்பதுதான் மர்மமாக உள்ளது. மதனின் முதல் மனைவி சிந்து கொடுத்த புகார் மனு மீது விசாரணை நடத்த அண்ணாநகர் துணைக்கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
பட அதிபர் மதன் மீண்டும் கைது
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்
ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்
எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions