பட அதிபர் மதனை கண்டுபிடிக்க போலீசுக்கு மேலும் அவகாசம்: ஐகோர்ட்டு உத்தரவு

Bookmark and Share

பட அதிபர் மதனை கண்டுபிடிக்க போலீசுக்கு மேலும் அவகாசம்: ஐகோர்ட்டு உத்தரவு

வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தவர் மதன். இவர் கடந்த மே மாதம் 28-ந்தேதி திடீரென தலைமறைவானார். அவரை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிட கோரி, சென்னை ஐகோர்ட்டில், அவரது தாயார் ஆர்.எஸ்.தங்கம் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இடம் வாங்கித் தருவதாக கூறி பல மாணவர்களிடம் பெரும் தொகை மோசடி செய்ததாக மதன் மீது புகார் வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து மதன் காணாமல் போன வழக்கு, அவர் மீதான மோசடி வழக்குகள் ஆகியவை குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதன்படி, கூடுதல் துணை கமி‌ஷனர் ராதாகிருஷ்ணன், இந்த வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டார். அவ்வப்போது அவர் தன் விசாரணையின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்து வருகிறார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காணாமல் போன மதனை கண்டுபிடிக்க கால அவகாசம் வேண்டும் என்று போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மேலும் 3 வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
பட அதிபர் மதன் மீண்டும் கைது
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்
ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்
எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions