மதன் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா?

Bookmark and Share

மதன் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா?

வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் நிர்வாகியாக இருப்பவர் மதன். இவர், ஏராளமான தமிழ் திரைபடங்களை தயாரித்துள்ளார். பல படங்களை வாங்கி விநியோகம் செய்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 28-ந் தேதி திடீரென தலைமறைவானார்.

அவர் எங்கு இருக்கிறார்? என்று அவரது குடும்பத்தினருக்கு தெரியவில்லை. இதுகுறித்து அவரது மனைவிகள், சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனுக்களை கொடுத்தனர்.

போலீசார் அந்த புகார் மனுக்கள் மீது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் மதனின் தாயார் ஆர்.எஸ்.தங்கம் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘என் மகன் மதன் கடந்த மே 27-ந் தேதி தொழில் நிமித்தமாக டெல்லி சென்றார். அடுத்த நாள் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு, மே 29-ந் தேதி சென்னை வருவதாக கூறினார். ஆனால், 29-ந் தேதி சென்னை வரவில்லை. அதற்கு பதில் ‘வாட்ஸ்அப்பில்’ தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார். 

அதில், எஸ்.ஆர்.எம். வேந்தருடன் பணம் தொடர்பான பிரச்சினையில் மனவேதனை அடைந்துள்ளதாகவும், காசிக்கு சென்று தன் வாழ்க்கையை முடித்து கொள்வதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து போலீசில் புகார் செய்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, என் மகனை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மதன் காணாமல் போனது குறித்து கொடுக்கப்பட்ட புகார் மீது கடந்த 1-ந் தேதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறினார்.

மேலும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளுக்கு இடம் வாங்கித் தருவதாக கூறி பெரும் தொகையை மதன் வாங்கி மோசடி செய்துள்ளதாக, மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பலர் புகார் செய்துள்ளனர். இந்த புகார்களை எல்லாம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பு வக்கீல் கூறினார்.

அதேநேரம், மதன் மீது கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் வழக்குகள் ஏதாவது பதிவு செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? என்ற விவரம் அரசு வக்கீலுக்கு தெரியவில்லை.

எனவே, இந்த வழக்கு விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று மதன் மீது ஏதாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்ற விவரங்களை போலீசாரிடம் கேட்டு அரசு வக்கீல் தெரிவிக்க வேண்டும். அதுவரை, காணாமல் போன மதனை போலீசார் தேடும் பணியை தொடரலாம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
பட அதிபர் மதன் மீண்டும் கைது
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்
ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்
எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions