மதனை கண்டுபிடிக்க கோரி மீண்டும் மனு!

Bookmark and Share

மதனை கண்டுபிடிக்க கோரி மீண்டும் மனு!

தற்கொலை செய்யப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு பட அதிபர் மதன், கடந்த மாதம் 27-ந் தேதியிலிருந்து தலைமறைவாகி விட்டார். அவரை கண்டுபிடிக்க கோரி விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது. 

மதனின் மனைவிகள் இருவரும் கமிஷனர் அலுவலகத்தில் தனித்தனியாக மனு கொடுத்தனர். இந்த நிலையில் நேற்று மதனின் தாயார் தங்கம், கமிஷனர் அலுவலகத்தில் தனது மகனை கண்டுபிடித்து மீட்டு தர வலியுறுத்தி புதிய கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

ஒரு பக்கம் மதனை மீட்டு தரக்கோரி மனுக்கள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், மதன் மீது மோசடி புகார் மனுக்களும் இன்னொரு பக்கம் குவிந்த வண்ணம் உள்ளது. மருத்துவ கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக கூறி மதன் கோடிக்கணக்கில் மோசடி செய்துவிட்டதாக தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இதுவரை சுமார் 55 புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மட்டும் 35 பேர் புகார் மனுக்கள் கொடுத்துள்ளனர். நேற்றும் 3 பேர் மதன் மீது மோசடி புகார் மனுக்கள் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
பட அதிபர் மதன் மீண்டும் கைது
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்
ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்
எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions