பட அதிபர் மதன் மீண்டும் கைது

Bookmark and Share

பட அதிபர் மதன் மீண்டும் கைது

எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக 133 மாணவ-மாணவிகளிடம் ரூ.90 கோடி மோசடி செய்ததாக பட அதிபர் மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாகிவிட்ட அவரை இந்தியா முழுவதும் தேடினார்கள். இறுதியில் திருப்பூரில் வைத்து மதன் கைது செய்யப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.இந்தநிலையில் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக மதன் மீது அமலாக்க பிரிவினரும் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். மதனுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து, பலமுறை அவரிடம் அமலாக்க பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று மதன் சென்னையில் உள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் கைது செய்யப்படலாம் என்று நேற்று மாலையில் இருந்து தகவல் வெளியானது. ஆனால் அமலாக்க பிரிவு அதிகாரிகள் மதன் கைதானதை உறுதி செய்யவில்லை.

நேற்று இரவு 8 மணிக்கு மேல் மதன் கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது. கைதான மதன் நேற்று இரவு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மதன் மறுபடியும் கைது செய்யப்பட்டு உள்ளதால் மருத்துவக்கல்லூரி சீட் மோசடி வழக்கில் மீண்டும் அதிரடி திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் மேலும் சிலர் மீதும் கைது நடவடிக்கை பாயுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.


Post your comment





Related News
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்
ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்
எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி
ரூ.10 கோடி உத்தரவாதத்துடன் வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமீன்
‘முன்னோடி’ படத்தை வெளியிடும் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன்
திருமணத்திற்கு பிறகு மஞ்சுவுக்கு ஏற்பட்ட அதே கதி நடிகை காவ்யா மாதவனுக்கும்?
ராணாவுக்கு சரியான பெயர் தான் வச்சிருக்காங்க! மதன் கார்க்கி வைரமுத்து







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions