காணாமல் போன மதனை கண்டுபிடிக்க போலீசுக்கு 2 வாரம் அவகாசம்!

Bookmark and Share

காணாமல் போன மதனை கண்டுபிடிக்க போலீசுக்கு 2 வாரம் அவகாசம்!

வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தவர் மதன். இவர் கடந்த மாதம் 28-ந் தேதி திடீரென தலைமறைவானார். இதையடுத்து, அவரை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை ஐகோர்ட்டில், அவரது தாயார் ஆர்.எஸ்.தங்கம் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இடம் வாங்கித்தருவதாக பல மாணவர்கள், பெற்றோர்களிடம் பெரும் தொகையை மதன் வாங்கியிருப்பதாக புகார் வந்துள்ளதாகவும், அந்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் அரசு வக்கீல் கூறினார்.

இதையடுத்து மதன் காணாமல் போன வழக்கு, அவர் மீது பதிவான வழக்கு ஆகியவற்றை விசாரிக்க ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியை நியமிக்கவேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணனை, சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, காணாமல் போன மதனை கண்டுபிடித்து ஆஜர்படுத்தும்படி, கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், மதனின் தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி, தன்னுடைய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். மதனை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த கால அவகாசமும் கேட்டார்.

இதையடுத்து அந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், பின்னர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கூடுதல் துணை கமிஷனர் தாக்கல் செய்த அறிக்கையை படித்து பார்த்தோம். இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் நேரடியாகவும் சில விளக்கங்களை கேட்டோம். அவரது விசாரணையில் எங்களுக்கு முழு திருப்தி ஏற்பட்டுள்ளது. அவர் சரியான முறையில் புலன் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.

இந்த வழக்கில் மறைந்துள்ள உண்மைகளை வெளிக்கொணர்ந்து, சட்டப்படியான நடவடிக்கையை அவர் எடுப்பார் என்று நம்புகிறோம். மதனை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த கூடுதல் துணை கமிஷனர் 4 வார காலஅவகாசம் கேட்டார். ஆனால், நாங்கள் 2 வாரம் அவகாசம் வழங்குகிறோம். விசாரணையை ஜூலை 6-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
பட அதிபர் மதன் மீண்டும் கைது
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்
ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்
எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions