மதனிடம் ஏமாந்தவர்களுக்கு 69 கோடியை திருப்பி கொடுக்க தயாராக உள்ளோம்: எஸ்.ஆர்.எம். கல்வி குழுமம் ஐகோர்ட்டில் மனு

Bookmark and Share

மதனிடம் ஏமாந்தவர்களுக்கு 69 கோடியை திருப்பி கொடுக்க தயாராக உள்ளோம்: எஸ்.ஆர்.எம். கல்வி குழுமம் ஐகோர்ட்டில் மனு

வேந்தர் பிலிம்ஸ் திரைப்படம் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி மதன், கடந்த மே மாதம் திடீரென தலைமறை வானார்.

இதுகுறித்து ஐகோர்ட்டில் அவரது தாயார் தங்கம் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதி தாசன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மோசடி வழக்கில் பச்சமுத்துவை போலீசார் கைது செய்துள் ளதாக’ கூறினார்.

அப்போது எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தின் சார்பில், பச்சமுத்துவின் இளைய மகன் சத்தியநாராயணா, ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்த பெற் றோர், மாணவர்கள் ஆகி யோருக்கு வழங்க வேண்டிய ரூ.69 கோடியை இந்த ஐகோர்ட்டில் செலுத்த தயாராக உள்ளதாக கூறப் பட்டிருந்தது.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து போலீஸ் தரப் பும், பணம் கொடுத்து ஏமாந்த பெற்றோர், மாண வர்கள் தரப்பும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறினார் கள்.

இந்த ஆட்கொணர்வு வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசா ரிக்க வேண்டும் என்றும் தன்னிடமும் பச்ச முத்து, மதன் ஆகியோர் பணம் பெற்று மோசடி செய்து இருப்பதாகவும், நிதி நிறுவன அதிபர் முகுல்சந்த் போத்ரா, கோரிக்கையை முன் வைத்தார்.

ஆனால், இவரது கோரிக் கையை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.

இந்த வழக்கு விசா ரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
பட அதிபர் மதன் மீண்டும் கைது
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்
ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்
எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions