வசனகர்த்தா மதன் கார்க்கி...!

Bookmark and Share

வசனகர்த்தா மதன் கார்க்கி...!

இன்றைய வளர்ந்து வரும் இளம் பாடலாசிரியர்களில் மதன் கார்க்கியும் முக்கியமானவர். அப்பா வைரமுத்துவைப் போல் அல்லாமல், இவர் ஆங்கிலமும், அறிவியிலும் கலந்து பாடல்களை எழுதி இளைஞர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறார்.

பல முன்னணி இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் மதன்கார்க்கிக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறார்கள். அதோடு இன்னொரு பக்கம் திரைப்படங்களுக்கு வசனம் எழுதி, வசனகர்த்தாவாகவும் புகழ் பெற்று வருகிறார்.

இதற்கு முன் “எந்திரன், நண்பன், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” ஆகிய படங்களுக்கு வசனம் எழுதிய மதன் கார்க்கி,  மே 1ம் தேதி வெளிவர உள்ள 'வை ராஜா வை' படத்திற்கும் வசனம் எழுதியிருக்கிறார்.

இந்தப் படத்தையடுத்து ராஜமெளலி இயக்கத்தில் வெளிவர உள்ள 'பாகுபலி' படத்திற்கும், சூர்யா நடித்து வரும் 'மாஸ்' படத்திற்கும் வசனம் எழுதியிருக்கிறார். ஒரு பக்கம் பாடலாசிரியராகவும், மறு பக்கம் வசனகர்த்தாவாகவும் தன்னை அடையாளப்படுத்தி வரும் மதன் கார்க்கி அடுத்து படங்களை இயக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
பட அதிபர் மதன் மீண்டும் கைது
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்
ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்
எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions