கால்கே வை படைத்தவன் நான்! கனவுலக கலைஞன் மதன் கார்க்கி!

Bookmark and Share

கால்கே வை படைத்தவன் நான்! கனவுலக கலைஞன் மதன் கார்க்கி!

குவியம் இல்லா காட்சிப் பேழை, ஒசக்க ஒசக்க, அஸ்கா லஸ்கா, ஐலா ஐலா& - இப்படி, புதுப்புது வார்த்தைகளை, தன் பாடல் வரிகளில் வார்த்தெடுப்பதில் வல்லவர், மதன் கார்க்கி! இப்படி சினிமாவில் பல சொற்களை பயன்படுத்தினாலும், தனிப்பட்ட முறையில், தமிழுக்கு சில தொண்டுகள் செய்யும் முயற்சியில் இருக்கிறார், இந்த மாடர்ன் பாடலாசிரியர்! கவிப்பேரரசு வைரமுத்துவின் மகன்& என்பது, காலம் இவருக்கு தந்த அடையாளம்.  கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம், மெல்லினம் கல்வி நிறுவனம் இரண்டும், தனக்கென்று இவர் உருவாக்கிக் கொண்ட கவுரவம்.

தற்போது, தமிழ், தெலுங்கு என, இருமொழிகளில் தயாராகியிருக்கும், பாகுபலி படத்திற்கு வசனம் எழுதிய உற்சாகத்திலும், பாரதிராஜாவின் ஓம் படத்துக்கு வசனம் எழுதும் முனைப்பிலும் இருந்தவர், நம்மிடம் இனிமையாக பேசத் துவங்கினார்!

ஒரு பிரம்மாண்ட கதைக்கு, வசனம் எழுதிய அனுபவம்? நான் ஈ படத்துக்கு, 'வீசும் வெளிச்சத்திலே...; பாட்டு எழுதின சமயம், ராஜமவுலி சார், ;வசனம் எழுதுவீங்களா? ன்னு கேட்டார்.

எழுதுவேன் னு சொல்லி வைச்சேன்! அந்த நொடியில உருவான வாய்ப்பு இது! ஆரம்பத்துல, இந்த படத்துக்கான வசனம், எந்த மொழி நடையில இருக்கணும்னு, நிறைய குழப்பம் இருந்தது! அப்புறமா, நாலுவிதமான மொழி நடைகளை உருவாக்கி, அதுல இருந்து எளிமையான ஒரு மொழி நடையை தேர்ந்தெடுத்தோம்! சரி... பாகுபலி யின் தமிழ் பற்றி...? முதல்ல, நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக்க விரும்புகிறேன்.

பாகுபலி, தெலுங்குல இருந்து தமிழ்ல டப் பண்ற படம் கிடையாது. காரணம், இந்த படத்தோட முக்கால்வாசி வசனங்களை தமிழ்ல எழுதிட்டு, அதுக்கப்புறம் தான் தெலுங்குல மொழிபெயர்ப்பு பண்ணினோம்.

இந்த வகையில, இது முழுக்க முழுக்க தமிழ் படம்! அப்புறம், இதுல காலகேயர்கள்ங்கற ஒரு பழங்குடியின சமூகம் வர்ற மாதிரி சில காட்சிகள் இருக்கு! அந்த மக்களுக்குன்னே, கால்கேனு ஒரு புதுமொழியை உருவாக்கியிருக்கேன்! ஆப்ரிக்காவோட தொன்மையான மொழியான, க்ளிக் தான், என் கால்கேவுக்கு தாய்!

அது என்ன,லிரிக் இன்ஜினியரிங்? லிரிக் இன்ஜினியரிங்னா, கம்ப்யூட்டரே பாடல் வரிகளை அமைச்சிடும்னு, பலர் தவறா புரிஞ்சுக்கிறாங்க. அது, அப்படியில்ல! நான் பாடல் எழுத ஆரம்பிச்சப்போ, எனக்கு பலவிதமான வர்ணனை வார்த்தைகள் தேவைப்பட்டது! அப்போ, எனக்கான ஒரு வழிகாட்டியா நான் தேர்ந்தெடுத்தது தான் லிரிக் இன்ஜினியரிங்! ஒரு கணக்கருக்கு எப்படி கால்குலேட்டரோ, அப்படி தான் எனக்கு இது! வார்த்தைகளை, சட்ன்னு எடுத்துக் கொடுக்கிற ஒரு தளம்!

கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் தற்போதைய பணி? தொழில்நுட்பங்களை அதிகமாக பயன்படுத்துற தலைமுறை தான், இப்போ தமிழை விட்டு விலகி இருக்காங்க! அவங்களை மறுபடியும் தமிழுக்கு கொண்டு வர்ற முயற்சியா, தமிழ்ல குறுஞ்செயலிகள் வடிவமைக்கிறோம்! இப்போவரைக்கும், குறள், அகராதின்னு இரண்டு குறுஞ்செயலிகள் வெளியிட்டிருக்கோம்!

ஆப்பிள் வாட்ச் சோட, முதல் தமிழ் செயலி, எங்கள்,  குறள் தான்!  உங்களின் விருப்பத்திற்குரிய புத்தகங்கள்? நான் புத்தகங்களை அதிகமா வாசிக்கிறதில்லை! அப்பாவோட புத்தகங்களை மட்டும் அப்பப்போ வாசிப்பேன். அதுல ரொம்ப பிடிச்சதுன்னு சொல்லணும்னா... கருவாச்சி காவியம்.

டக் கென்று, நான்கு காதல் வரிகள் சொல்லுங்களேன்? அப்படியெல்லாம், 'டக்'குனு வெறும் நாலு வரியில காதலை சொல்லிட்டா, என்னை மாதிரியான பாடலாசிரியர்களுக்கு வேலையே இல்லாம போயிடும்,! சிரித்தபடியே விடைபெறுகிறார்.


Post your comment

Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
பட அதிபர் மதன் மீண்டும் கைது
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்
ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்
எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions