பஜிராவ் மஸ்தானி பட வசனம் குறித்து விளக்கும் மதன் கார்க்கி

Bookmark and Share

பஜிராவ் மஸ்தானி பட வசனம் குறித்து விளக்கும் மதன் கார்க்கி

தமிழில் ‘எந்திரன்’, ‘பாகுபலி’ ஆகிய பிரம்மாண்டமான படைப்புகளுக்கு வசனம் மற்றும் பாடல் எழுதியவர் மதன் கார்க்கி தற்போது இந்தியில் உருவாகும் ‘பஜிராவ் மஸ்தானி’ என்ற படத்திற்கு பாடல் எழுதி வருகிறார். 

இப்படம் தமிழ், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு, வருகிற டிசம்பர் 18-ந் தேதி வெளிவரவிருக்கிறது. இப்படத்தில் பாடல்கள், தமிழ் பதிப்பின் வசனங்களையும் மதன் கார்க்கிதான் எழுதி வருகிறார் என்ற செய்தி பரவலாக பரவியது. 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மதன்கார்க்கி தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘பஜிராவ் மஸ்தானி’ படத்தின் தமிழ் பதிப்பிற்கு வசனங்கள் எழுதுவதாக வந்த செய்தி எதுவும் உண்மையில்லை. இப்படத்திற்கு நான் பாடல்கள் மட்டுமே எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார். 

இப்படத்தில் ரன்வீர் சிங் , தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

 


Post your comment





Related News
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
பட அதிபர் மதன் மீண்டும் கைது
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்
ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்
எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions