பாப்புலராகி வரும் மதன் கார்க்கி உருவாக்கிய கிளிக்கி மொழி

Bookmark and Share

பாப்புலராகி வரும் மதன் கார்க்கி உருவாக்கிய கிளிக்கி மொழி

பொதுவாக ஹாலிவுட்டில் பீரியட் படங்கள், ஆதிவாசிகளின் படங்கள் எடுக்கும்போது ஆதிவாசிகளின் மொழியாக அவர்களே ஏதாவது ஒரு புதிய மொழியை உருவாக்கிக் கொள்வார்கள். குறிப்பாக லார்ட் ஆஃப்தி ரிங்ஸ், அபோகலிப்டோ படங்களில் ஆதிவாசிகள் படம் முழுக்க பேசிக்கொள்கிற மொழி கற்பனையாக உருவாக்கப்பட்ட மொழி.

அதேபோன்று இந்திய சினிமாவில் முதன் முறையாக உருவாக்கப்பட்டது கிளிக்கி மொழி, பாகுபலி படத்தில் காளகேயர்கள் பேசுவதற்காக உருவாக்கப்பட்ட மொழி. இந்த மொழியில் 750 சொற்களை உருவாக்கி அதற்கு பொருளும் உருவாக்கி இருக்கிறார் மதன் கார்க்கி.

இந்த மொழி பேசுவதற்கு கம்ப்யூட்டர் மவுசை கிளிக் பண்ணுகிற மாதிரி சிம்பிளாக இருப்பதால் கிளிக் என்று பெயர் வைத்தார். அது ஆங்கில வார்த்தை என்பதால் கிளிக்கி என்று மாற்றிவிட்டார்.

இந்த மொழியில் வசனம் எழுதித்தான் அதனை காளகேயர்களின் தலைவராக நடித்த பிரபாகர் மனப்பாடம் செய்து பேசி நடித்தார்.

தற்போது இந்த மொழியை கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் ரகசியம் பேசிக் கொள்ள பயன்படுத்துகிறார்களாம். பாகுபலியின் இரண்டாம் பாகத்திலும் காளகேயர்கள் வருகிறார்கள்.கிளிக்கி மொழியும் வருகிறது.

இரண்டாம் பாகம் வந்த பிறகு மேலும் பல வார்த்தைகளை சேர்த்து எளிமையான இலக்கணம் உருவாக்கி இணைய தளத்தின் மூலம் இந்த மொழியை விரும்புகிறவர்களுக்கு கற்றுக்கொடுக்க இருக்கிறார் மதன் கார்க்கி.


Post your comment

Related News
பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி!
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
பட அதிபர் மதன் மீண்டும் கைது
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்
ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions