சினிமா ஆசையால் மதனிடம் வீழ்ந்த வர்ஷா

Bookmark and Share

சினிமா ஆசையால் மதனிடம் வீழ்ந்த வர்ஷா

மதன் வலையில் வர்ஷா வீழ்ந்தது சுவாரஷ்யமானது. திருப்பூரில் நவநாகரீகத்தை விரும்பும் பெண்களுக்கு எஸ்.ஏ.பி. தியேட்டர் அருகே உள்ள ‘வீஸ்போட்டிக்’ என்ற நாகரீக ரெடிமேட் கடையை தெரியாமல் இருக்காது. அதுதான் வர்ஷா நடத்தி வரும் கடை. இந்த கடையில் நான்கைந்து பெண்கள் வேலை பார்க்கிறார்கள்.

வர்ஷாவுக்கு மிகவும் பிடித்தமானது ஆடை வடிவமைப்பு. செல்வ செழிப்பான தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்த வர்ஷா பள்ளிப் படிப்பை தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் முடித்தார். பின்னர் பே‌ஷன் டிசைனிங் பட்டப்படிப்பை முடித்தார்.

35 வயதாகும் வர்ஷாவுக்கு திருமணமாகி விட்டது. ஸ்ரீராம் (16), தருண் (7) என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.பே‌ஷன் டிசைனிங் தொழிலில் இறங்கிய வர்ஷா நடிகைகளுக்கு ஆடை வடிவமைத்தும் கொடுத்தார். திரை உலக தொடர்பு ஏற்பட்டதும் வீட்டுக்குள் பிரச்சினை எழுந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நிரந்தர பிரிவுக்கு வழிவகுத்தது.

6 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த வர்ஷா தனது குழந்தைகளுடன் தனிக்குடித்தனத்தை தொடங்கினார். அவினாசியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்தபோது துணை நடிகைகள் போல் அழகிய பெண்கள் பலர் வந்து போனார்கள். இதனால் குடியிருப்பு வாசிகள் துரத்தினார்கள்.

அங்கிருந்து வெளியேறிய வர்ஷா தற்போது குடியிருக்கும் பூண்டி அருகில் உள்ள ஜி.வி.கார்டன் பங்களா வீட்டுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு குடிவந்தார்.
கீழ்தளத்தில் இரண்டு படுக்கையறை, மிகப்பெரிய ஹால், சாப்பாட்டு அறை, மேல்தளத்தில் இரண்டு அறை, சுற்றிலும் தோட்டத்துடன் பிரமாண்டமாக இருக்கும் இந்த வீட்டுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வாடகை கொடுத்து வருகிறார்.

சினிமா துறையினருடன் தொடர்பு ஏற்பட்ட போதுதான் வர்ஷாவுக்கும் மதனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வர்ஷாவுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசையும் இருந்துள்ளது. இதனால் பட தயாரிப்பாளரான மதனிடம் நெருங்கி பழகி வந்தார். மதனும் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களிடையே நெருக்கம் அதிகரித்தது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருந்தால்தான் பிரச்சினை வருகிறது என்பதால் இந்த தனிவீட்டை தேர்வு செய்துள்ளார். இந்த பகுதியில் சுமார் 15 பங்களா வீடுகள் உள்ளன. ஆள் அரவமற்ற இந்த பகுதி வர்ஷாவின் தனி வாழ்க்கைக்கு வசதியாக இருந்துள்ளது.

மதனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த வர்ஷாவை சந்திக்க அடிக்கடி மதன் சென்றுள்ளார். தான் பிரச்சினையில் சிக்கி இருப்பதையும், போலீஸ் மோப்பம் பிடித்து வடமாநிலங்களிலும் தேடி வந்ததையும் தெரிவித்து வர்ஷா வீட்டில் தலைமறைவு வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்.

பகல் நேரங்களில் மதன் வெளியே வருவதில்லை. அவர் வெளியே சுற்றுவதற்காக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளும் வாங்கி இருக்கிறார்கள். இரவு 7 மணிக்கு மேல் அந்த மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வெளியே செல்வாராம்.. மீண்டும் நள்ளிரவுதான் வீடு திரும்புவாராம்.

வர்ஷா வீட்டில் விலை உயர்ந்த 2 சொகுசு கார்கள் உள்ளன. மதன் அங்கு தலைமறைவாக இருந்தபோது அந்த காரில் அடிக்கடி கோவைக்கும் சென்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது காரை வர்ஷாதான் ஓட்டி செல்வாராம். கோவைக்கு எங்கு சென்றார்கள்? எதற்காக சென்றார்கள்? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

மதனை வீட்டுக்குள் மடக்கியதும் வர்ஷா நடுங்கி போனார். கடந்த 3 நாட்களாக கடையும் திறக்கவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார். இன்று பத்திரிகையாளர்கள் பலர் அந்த வீட்டின் முன்பு கூடியிருந்தார்கள். ஆனால் வர்ஷா வெளியே தலைகாட்டவில்லை.

அங்கு வந்த வர்ஷாவின் கார் டிரைவர் ‘அக்கா வீட்டில்தான் இருக்காங்க. என்ன விசயமா கூடி இருக்கீங்க?’ என்று அப்பாவித்தனமாக கேட்டு சென்றார்.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions