பட அதிபர் மதன் நேபாளத்தில் பதுங்கலா?: போலீஸ் தீவிர விசாரணை

Bookmark and Share

பட அதிபர் மதன் நேபாளத்தில் பதுங்கலா?: போலீஸ் தீவிர விசாரணை

வேந்தர் மூவிஸ் சினிமா பட நிறுவனத்தின் அதிபர் மதன் மாயமாகி ஒரு மாதம் ஆகிவிட்டது. அவரை கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர் கொடுத்த புகார் அடிப்படையில் ஒரு வழக்கும், மருத்துவக்கல்லூரிகளில் சீட் வாங்கித்தருவதாக ரூ.100 கோடி வரை மோசடி செய்துவிட்டதாக 103 பேர் கொடுத்த புகார் அடிப்படையில் இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த 2 வழக்குகளையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 4 தனிப்படை போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். மதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும், வாரணாசி மற்றும் நெல்லை ஆகிய நகரங்களிலும் முகாமிட்டு தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

மதன் பதுங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்கொலை செய்யப்போவதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு சென்ற மதன் இதுவரை உயிரோடு இருப்பதாகவே தெரிய வந்துள்ளது. மதனோடு அவரது உதவியாளர்கள் குணா, சுதிர் ஆகியோரும் காணாமல் போய்விட்டனர். அவர்களையும் போலீசார் தேடிவருகிறார்கள்.

தலைமறைவான மதன் நேபாள நாட்டில் பதுங்கியிருக்கலாம் என்ற தகவல் தற்போது போலீசாருக்கு கிடைத்துள்ளது. எனவே நேபாளத்திற்கும் செல்ல தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதுவரை இந்த வழக்கில் சினிமா பிரமுகர்கள், தனியார் மருத்துவக்கல்லூரிகளின் நிர்வாகிகள், சினிமா வினியோகஸ்தர்கள் உள்ளிட்ட நிறைய பேரிடம் போலீசார் விசாரித்துள்ளனர். மதன் பாயும் புலி, தில்லுமுல்லு ஆகிய 2 படங்களை தயாரித்துள்ளார்.

லிங்கா உள்பட 10 படங்களுக்கு வினியோகஸ்தராக செயல்பட்டுள்ளார். அவர் மாயமான சமயத்தில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற புதிய படத்தை தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு இருந்தார். அவர் ரூ.35 கோடி வரை கடனும் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தனது பெயரிலும், தனது 2 மனைவிகள் மற்றும் பெற்றோர் பெயரிலும் என்னென்ன சொத்துகள் வாங்கியுள்ளார் என்ற பட்டியலையும் போலீசார் தயாரித்து வருகிறார்கள்.

மதன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள மோசடி வழக்கில் முதல் முறையாக மதனின் நெருங்கிய கூட்டாளியான விஜயபாண்டி (வயது 31) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

என்ஜினீயரான விஜயபாண்டி சென்னை குரோம்பேட்டையில் வசித்துவந்தார். மருத்துவக்கல்லூரி சீட்டுகளுக்காக பணம் வாங்கி கொடுக்கும் ஏஜெண்டாக மதனிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அவர் கடந்த 2 ஆண்டுகளில் மருத்துவக்கல்லூரிகளில் சீட் வாங்கித்தருவதாக 16 பேரிடம் ரூ.10 கோடி அளவுக்கு பணம் வசூலித்துள்ளார். ஆனால் அந்த 16 பேருக்கும் மருத்துவக்கல்லூரிகளில் சீட் வாங்கித்தரப்படவில்லை. அவர்களிடம் வசூலித்த ரூ.10 கோடி பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று தெரிகிறது.

விஜயபாண்டி மீது டாக்டர் உள்பட 3 பேர் மட்டும் தற்போது புகார் கொடுத்துள்ளனர். மதனின் மோசடி விவகாரம் மற்றும் அவர் மாயமான சம்பவம் ஆகியவை குறித்து போலீசார் விஜயபாண்டியிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

தீவிர விசாரணைக்கு பிறகு விஜயபாண்டி நேற்று சென்னை சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மாயமான பட அதிபர் மதன் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டால் நிறைய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்
தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அதிரடி அறிவிப்புகள்
பாட்ஷா இரண்டாம் பாகத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்! - சத்யா மூவீஸ்
ரூ.10 கோடி உத்தரவாதத்துடன் வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமீன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions