பெண்களை கவர தெரியாது: மாதவன்

Bookmark and Share

பெண்களை கவர தெரியாது: மாதவன்

‘வேட்டை’ படத்தை முடித்துவிட்டு மும்பை சென்ற மாதவன் அடுத்த 3 வருடம் புதிய படம் எதிலும் தலைகாட்டவில்லை.

இதுபற்றி அவர் கூறியது:

நான் இடைவெளி எடுத்துக்கொண்டதற்கு காரணம் எனது தோற்றம் எனக்கே திருப்தியாக இல்லாததுதான். மேலும் எனக்கேற்ற படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது.

‘சாலா கஹதூஸ்’ இந்தி படத்திற்காக 3 ஆண்டு இடைவெளியை பயன்படுத்திக்கொண்டேன். ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். தற்போது அது தயாராகிவிட்டது. பாக்ஸர் வேடம்.

அத்தோற்றத்துக்கு கடுமையான பயிற்சிகள் செய்து கட்டுமஸ்தான தோற்றத்துக்கு மாறினேன். அதன்பிறகு தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்துக்கு மீண்டும் சாதாரண தோற்றத்துக்கு மாறினேன்.  

தென்னிந்திய நடிகர் என்பதால் பாலிவுட்டில் பிரச்னையா? என்கிறார்கள். இயக்குனர் என்ன தேவை  என்று கேட்கிறாரோ அதை தராவிட்டால் யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நான் பீகாரில் பிறந்து வளர்ந்தேன். தமிழில் நடிக்க சென்றால் மும்பையிலிருந்து நடிக்க வந்துவிட்டதாக கூறுகிறார்கள். இந்தியில் நடிக்கச் சென்றால் தமிழ் படத்திலிருந்து வந்திருப்பதாக கூறுகிறார்கள்.

ஆனால் அடிப்படையில் என்னை ஏற்றுக்கொண்டிருப்பது சந்தோஷம். 20 வருடம் சினிமாவில் இருக்கிறீர்களே யாருடனும் உங்களை இணைத்துபேசவில்லையே எப்படி மேனேஜ் செய்தீர்கள் என்கிறார்கள்.

ஒருவேளை நான் போரடிப்பவனாக இருக்கலாம். ஒரு ஹீரோ, பெண்களால் விரும்பப்படுபவனாக இருக்க வேண்டும். அப்போதுதான் செட்டில் ஹீரோவாக இருக்க முடியும். பெண்களை ரொம்பவும் கவர்வதென்றால் பயம். காரணம் எனது மனைவி மற்றும் குடும்பத்தை நான் இழக்க விரும்பவில்லை.

இவ்வாறு மாதவன் கூறினார். 


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions