பணத்துக்காக என்றும் நடிக்க மாட்டேன்: மாதவன் பேச்சு

Bookmark and Share

பணத்துக்காக  என்றும் நடிக்க மாட்டேன்: மாதவன் பேச்சு

மாதவன்-ரித்திகா சிங் நடித்துள்ள ‘இறுதிச் சுற்று’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடந்தது. விழாவில் மாதவன் பேசியதாவது:- 

‘‘இறுதிச்சுற்று படத்தில் நடித்தபோது பல தடங்கல்கள் வந்தன. ஒவ்வொரு தடவை படப்பிடிப்புக்கு சென்றபோதும் பிரச்சினைகளை சந்தித்தோம். கஷ்டங்களும் அவமானங்களும் ஏற்பட்டன. ஒரு கட்டத்தில் இந்த படத்தை கைவிட்டு விட்டு வேறு படத்துக்கு போய்விடலாம் என்றும் யோசித்தோம்.

ஆனால் எனக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் இந்த படத்தின் கதாபாத்திரம் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்று கூறி தடுத்தார். 

அதன்பிறகு படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி ஒரு வழியாக முடித்தோம். படம் வெளியான பிறகு நல்ல வரவேற்பை பெற்றது. பாராட்டுகளும் கிடைத்தன.

ஏற்கனவே பட்ட அவமானங்கள் மறைந்து விட்டன. பணத்துக்காக நடிக்க கூடாது. பாராட்டு கிடைப்பது மாதிரியான நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த படம் மூலம் எனக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று இங்கே பேசினார்கள். 

நான் எங்கேயும் போக மாட்டேன். தமிழ் சினிமாதான் எனக்கு உயிர். இவ்வாறு மாதவன் பேசினார். 

விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா கலந்துகொண்டு பேசும்போது, ‘‘இறுதிச்சுற்று என்னை கவர்ந்த மிக சிறந்த படம். நல்ல படங்களுக்கு எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தரமான படங்களுக்கு என் சொந்த பட நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் விருது வழங்க முடிவு செய்துள்ளேன். 

முதல் தடவையாக ‘இறுதிச்சுற்று’ படத்துக்கு இந்த விருது வழங்கப்படுகிறது’’ என்றார். பின்னர் படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு வெள்ளிப்பதக்கங்கள் அணிவித்தார்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தாணு, நடிகை ரித்திகாசிங், பட அதிபர் சஷிகாந்த், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடலாசிரியர் விவேக் ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டனர்.


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions