‘இறுதிச்சுற்று’ படத்தின் இசை வெளியீடு விழாவில் மாதவன் வருத்தம்

Bookmark and Share

‘இறுதிச்சுற்று’ படத்தின் இசை வெளியீடு விழாவில் மாதவன் வருத்தம்

மணிரத்னம் டைரக்டு செய்த ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், மாதவன். என்னவளே, மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், பிரியமான தோழி உள்பட பல படங்களில் நடித்த இவர், கடந்த சில வருடங்களாக இந்தி படங்களில் நடித்து வருகிறார். 

5 வருட இடைவெளிக்குப்பின் இவர், ‘இறுதிச்சுற்று’ என்ற தமிழ் படத்தில் நடித்து இருக்கிறார். சசிகாந்த் டைரக்ஷனில், சி.வி.குமார் தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த மாதவன் அளித்த பேட்டி வருமாறு:- 

கேள்வி:- இந்தி பட உலக அனுபவம் எப்படியிருக்கிறது? 

பதில்:- கடவுள் புண்ணியத்தில் நன்றாக இருக்கிறேன். 5 வருடங்களில், 11 இந்தி படங்களில் நடித்து விட்டேன். அதில், ‘தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்’ என்ற இந்தி படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, ரூ.224 கோடி வசூல் செய்தது. 

கேள்வி:- தமிழ் பட கதாநாயகர்களுக்கு இந்தி பட உலகில் ஆதரவு கொடுப்பதில்லை என்று ஒரு பேச்சு இருந்து வருகிறதே...உங்களுக்கு எப்படி? 

பதில்:- இந்தி மட்டுமல்ல. எந்த ஒரு பிற மொழி பட உலகிலும் மற்ற மொழியை சேர்ந்த நடிகர்களுக்கு ஆதரவு கொடுப்பதில்லை. புதிதாக வருபவர்களை அரவணைப்பதில்லை. எனக்கு இந்தி பேச தெரியும் என்பதால் பிழைத்துக் கொண்டேன். இதே மாதவன் ஒரு இந்தி நடிகரின் மகனாக இருந்திருந்தால், அங்கே என்னை உயரத்தில் தூக்கி வைத்து கொண்டாடியிருப்பார்கள்.

கேள்வி:- ‘தனி ஒருவன்’ தெலுங்கு படத்தில், நீங்கள் வில்லனாக அரவிந்தசாமி வேடத்தில் நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானதே? 

பதில்:- ‘தனி ஒருவன்’ தெலுங்கு படக்குழுவினர் என்னிடம் போனில் மட்டும் பேசினார்கள். அதன்பிறகு அவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும் இல்லை. நான் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், அந்த படத்துக்கு ‘கால்ஷீட்’ கொடுக்க என்னிடம் தேதிகளும் இல்லை. நான் வில்லனாக நடிக்க சம்மதித்ததாக வந்த தகவலில் உண்மை இல்லை. அது எனக்கு பொருந்தாது. 

கேள்வி:- ‘இறுதிச்சுற்று’ படத்தில் என்ன வேடத்தில் நடித்து இருக்கிறீர்கள்? 

பதில்:- குத்துச்சண்டை பயிற்சியாளராக கதாநாயகனாகவே நடித்து இருக்கிறேன். தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பயிற்சியாளர் உலக அளவில் புகழ் பெறுவது போன்ற கதாபாத்திரம் அது. என்னிடம் பயிற்சி பெறுபவராக ரித்திகா அஸ்வின் நடித்து இருக்கிறார். 

கேள்வி:- தமிழில் வேறு புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறீர்களா? 

பதில்:- இரண்டு வருடங்களுக்கு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு படத்தில்தான் நடிக்க முடிகிறது. 

கேள்வி:- எதிர்கால திட்டம் என்ன? 

பதில்:- வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ஒரே திட்டம்தான்... 

கேள்வி:- உங்கள் மனைவி-மகன் எப்படியிருக்கிறார்கள்? 

பதில்:- நன்றாக இருக்கிறார்கள். என் மகன் வேதாந்த் இப்போது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.’’ 
இவ்வாறு மாதவன் கூறினார்.


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions