நடிகர் மாதவன் மீதான வழக்கு ஐகோர்ட்டில் முடித்துவைப்பு!

Bookmark and Share

 நடிகர் மாதவன் மீதான வழக்கு ஐகோர்ட்டில் முடித்துவைப்பு!

திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், பாலசமுத்திரம் பகுதியில் உள்ள கால்வாயை ஒட்டி உள்ள 4 ஏக்கர் 88 சென்டு நிலத்தை நடிகர் மாதவன் விலைக்கு வாங்கி உள்ளார். நடிகர் மாதவன் கால்வாயின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளார் என்று கூறியிருந்தார். 

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது பழனி தாசில்தார் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘பட்டா நிலத்துக்குள் தான் கால்வாய் செல்கிறது. இதன்மூலம் நடிகர் மாதவன் கால்வாயை ஆக்கிரமித்துள்ளார் என்ற கேள்வியே எழவில்லை’ என்று கூறப்பட்டிருந்தது. 

நடிகர் மாதவன் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘புறம்போக்கு இடத்தில் உள்ள கால்வாய் எதையும் ஆக்கிரமிக்கவில்லை. தண்ணீர் சீராக செல்வதற்கு வசதியாக எனது இடத்துக்குள் இருந்த கால்வாயை சரி செய்து வேலி அமைத்துக் கொடுத்துள்ளோம்‘ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் நூட்டி ராமமோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கால்வாய் ஆக்கிரமிப்பு எதுவும் இல்லை என்று தாசில்தார் தெரிவித்திருப்பதால் நடிகர் மாதவன் மீதான மனு முடித்து வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர். 


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions