துல்கர் சல்மானுடன் மலையாள படத்தில் நடிக்கும் மாதவன்!

Bookmark and Share

துல்கர் சல்மானுடன் மலையாள படத்தில் நடிக்கும் மாதவன்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன் தயாரித்து, நடித்து தமிழ், இந்தியில் வெளியான இறுதிச்சுற்று வெற்றிப் படமாக அமைந்தது. இதில் அவருடன் குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங் நடித்துள்ளார்.

அதை தொடர்ந்து இப்போது மலையாளப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மாதவனுக்கு கிடைத்திருக்கிறது. மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் லவ்இன் என் ஜென்கோ படத்தில் அவருடன் முக்கிய வேடத்தில் மாதவன் நடிக்கிறார். நாயகியாக தன்ஷிகா நடிக்கிறார். நடிகரும் இயக்குனருமான பிரதாப்போத்தன் இந்த படத்தை தயாரித்து இயக்குகிறார்.

பல வருடங்களுக்கு முன்பு மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் தயாரான மேட்இன் யு.எஸ்.ஒ. படத்தில் மாதவன் நடித்தார். அதன் பிறகு இந்த மலையாள படத்தில்தான் நடிக்கிறார்.

பிரதாப்போத்தன், மாதவன் இந்த பாத்திரத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதியதால் மாதவனிடம் பேசி நடிக்க வைத்திருக்கிறார். இந்த படத்துககு இளையராஜா இசை அமைக்கிறார்.


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions