நடிகர் மாதவன் மீது விவசாயிகள் புகார்

Bookmark and Share

நடிகர் மாதவன் மீது விவசாயிகள் புகார்

நடிகர் மாதவன் மீது பழனி பகுதி விவசாயிகள் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார்.

இதில் பாலசமுத்திரம் பகுதி விவசாயிகள் மகாலெட்சுமி, கணேசன் ஆகியோர் பேசுகையில், பழனி அருகே உள்ள விலாங்கோம்பை தேக்கன் தோட்டம் பகுதியில் டிடிஎல் பாசன வாய்க்கால் உள்ளது.

கொடைக்கானல் மலையில் இருந்து பழனி கண்மாய்களுக்கு இந்த வாய்க்கால் மூலம் வரும் தண்ணீரால் தேக்கன் தோட்டம் பகுதியில் 50 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இப்பகுதியில் 7 ஏக்கர் நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் மாதவன் வாங்கினார்.

அதன் பிறகு மாதவன் தரப்பினர் 50 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து மின்வேலி அமைத்துள்ளனர்.  

பாசன வாய்க்கலை அழித்ததோடு, நடைபாதை, புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்த நடிகர் மாதவன் மீதும், துணை போகும் அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். புகார் தொடர்பாக வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions