மீண்டும் இணையும் மாதவன், ஆர்யா, அமலாபால்!

Bookmark and Share

மீண்டும் இணையும் மாதவன், ஆர்யா, அமலாபால்!

மாதவன், ஆர்யா, அமலாபால் மூன்று பேரும் சேர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ‘வேட்டை’ படத்தில் நடித்திருந்தனர். தற்போது மூன்று பேரும் மறுபடியும் கூட்டணி அமைத்துள்ளனர். சென்னை, ஐதராபாத், கொச்சி, பெங்களூரு ஆகிய ஊர்களில் நடைபெறவிருக்கும் ‘நட்சத்திர பேட்மிண்டன்’ போட்டிக்காக மூன்று பேர் ஒரே கூட்டணியில் இணைந்துள்ளனர். 

நட்சத்திர கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து தற்போது நட்சத்திர பேட்மிண்டன் போட்டி விரைவில் நடைபெறவிருக்கிறது. ‘செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்’ என்ற பெயரில் நடக்கவிருக்கும் இந்த போட்டிகள் சென்னை, ஐதராபாத், கொச்சி, பெங்களூரு ஆகிய ஊர்களில் நடைபெறவிருக்கிறது. இறுதிப்போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது.

இதில், சென்னை அணி சார்பில் விளையாடும் வீரர்களின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த அணியில் நடிகர் ஆர்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பரத், பிரசன்னா, அபிநய் வட்டி, அமிதாஷ், முன்னா, சாந்தனு, வைபவ், காயத்ரி, இனியா, ரூபா மஞ்சரி ஆகியோரும் விளையாடுகிறார்கள். 

இந்த அணியின் விளம்பர தூதராக மாதவன் பொறுப்பேற்றுள்ளார். மேலும் அணியின் ஊக்குவிப்பாளராக அமலாபால் ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களை நடிகரும், நடிகர் சங்க தலைவருமான நாசர் அறிமுகம் செய்து வைத்தார்.


Post your comment





Related News
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions