மாதவனுக்கு வில்லனான ரஜினி வில்லன்!

Bookmark and Share

மாதவனுக்கு வில்லனான ரஜினி வில்லன்!

துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் சார்லி. வித்தியாசமான கதைகளத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் தமிழ் ரீமேக்கில் விஜய் இயக்கத்தில் மாதவன் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

ஆனால் அதற்கு முன்பாகவே தேசிய விருது பெற்ற இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தாய்லாந்தில் தொடங்கி பின்னர் நேபாளம், மகாராஸ்டிரா, சென்னை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இந்த படத்துக்காக நடிகர் மாதவன் தனது உடல் எடையை அதிரடியாக குறைத்து வருகிறார். மேலும் கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த ஜாக்கி ஷெராப் இப்படத்தில் மாதவனுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions