எந்த கான்களோடும் எனக்கு போட்டி இல்லை: தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ் பட வெற்றி குறித்து நடிகர் மாதவன் பேட்டி

Bookmark and Share

எந்த கான்களோடும் எனக்கு போட்டி இல்லை: தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ் பட வெற்றி குறித்து நடிகர் மாதவன் பேட்டி

நடிகர் மாதவனின் புதிய இந்திப்படமான 'தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ்' பாலிவுட் சந்தையில் 100 கோடி கிளப் வரிசைக்குள் நுழைந்து, வசூலிலும் சாதனை படைத்து வருகின்றது. படம் ரிலீசான இரு வாரங்களில் சுமார் 150 கோடி வசூலாகியுள்ளதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், இந்த வெற்றி தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மாதவன்(45) பாலிவுட்டில் எனக்கு எந்த கான்களோடும் போட்டியிடும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார். 

'ரெஹ்னா ஹை தேரே தில் மெய்ன்', படத்தின் மூலம் இந்திப்பட உலகில் கடந்த 2001-ம் ஆண்டு அறிமுகமான மாதவன், தொடர்ந்து 'ரங் தே பஸந்தி', 'குரு', 'தனு வெட்ஸ் மனு' உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி, இந்தி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில், 'தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ்' பட வெற்றி குறித்து பேட்டியளித்துள்ள மாதவன், 'என்னால் என்ன முடியும்? என்ற எனது திறமைகளை இந்திப்பட தயாரிப்பாளர்களிடம் முழுமையாக நான் இன்னும் வெளிப்படுத்தவில்லை.

நடிப்பில் இருந்து மூன்றாண்டுகள் ஓய்வு எடுத்து கொண்டு, அந்த இடைவெளிக்குப் பின்னர் தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ் படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படம் வெளியானதும் ரசிகர்களின் அளவுகடந்த அன்பு என் மீது பொழியத் தொடங்கியுள்ளது. 

ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி போன்ற விலையுயர்ந்த கார்களில் போக யாருக்குதான் பிடிக்காது. அதைப்போல் மூன்று மாதங்களுக்கு ஒரு படம் தர எனக்கும் ஆசைதான். ஆனால், இறுதியில் நாம் என்ன வேலை செய்தோம்? என்று எண்ணிப் பார்க்கும்போது, நாம் செய்த வேலையில் நமக்கு ஒரு மனநிறைவு ஏற்பட வேண்டும். என்னைப் பொருத்தவரை பணத்துக்காக மட்டும் ஒரு படத்தில் நடிப்பதில் உடன்பாடில்லை. 

கான்களுடனோ (ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான்) வேறு எந்த நடிகர்களுடனோ நான் போட்டியிடவில்லை. எனது வேலையை சிறப்பாக செய்வதையே விரும்புகிறேன். எனவே, இந்த தொழிலில் ஒருவரோடு, ஒருவர் போட்டியிடுவதாக கூறப்படுவது எல்லாம் ஊடகங்களின் விளையாட்டு, அவ்வளவுதான். 

ஒரு நல்ல படத்தை உருவாக்குவது கடினமான காரியம். படத்தின் 'பர்ஸ்ட் லுக்', படத்தை நல்லபடியாக வியாபாரம் செய்து, குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்வது என பல பிரச்சனைகள் உள்ளன. ஒரு விருது பெறுவதில் எனக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று அர்த்தமல்ல. இந்தியாவில் விருது பெறுவது என்பது ஒன்றும் புதிதல்ல, விருது பெறுவதில் உள்ள முக்கியத்துவம் என்னவென்றால், அது செய்தியாகிறது என்பது மட்டுமே. 

யார் முதல் இடத்தில் இருக்கும் நடிகர்? என்ற நம்பர் விளையாட்டிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. எவ்வளவு காலம் இந்த துறையில் நீடித்து, நிலைத்திருக்கிறோம்? என்பதும், உங்களுக்கு எத்தனை பேர் நடிக்கும் வாய்ப்பு அளிக்கிறார்கள் என்பதும்தான் முக்கியம். 

அவ்வகையில், இன்றும் கூட படங்களில் நடித்து கொண்டிருக்கும்.., அந்தப் படங்கள் எல்லாம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதை வைத்து பார்க்கையில், திரு.அமிதாப் பச்சன் மிகவும் வெற்றிகரமான நபர் என்றே நான் கருதுகிறேன்' என  கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை
அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions