'பாப்கார்ன், சமோசா' க்காகத்தான் படம் பார்க்கிறேன் - மதுபாலா

Bookmark and Share

'பாப்கார்ன், சமோசா' க்காகத்தான் படம் பார்க்கிறேன் - மதுபாலா

மதுபாலா யாரென்று இன்றைய தலைமுறையினருக்குத் தெரியுமா என்பது சந்தேகம்தான். "அழகன், வானமே எல்லை, ரோஜா, ஜென்டில்மேன், பாஞ்சாலங்குறிச்சி, இருவர்,,” ஆகிய 90களில் வெளிவந்த படங்களில் நாயகியாக நடித்தவர் மதுபாலா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த வருடம் வெளிவந்த 'வாயை மூடிப் பேசவும்' படத்தில் நடித்தார். சமீபத்தில் வெளிவரும் படங்களைப் பற்றி அவர் அடித்த ஒரு கமெண்ட் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

“ஷமிதாப்" டிரைலர் மிகவும் அற்புதமாக உள்ளது, படத்தில் நிறைய விஷயம் உள்ளது என்ற எதிர்பார்ப்பை அந்தப் படம் ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படிப்பட்ட ஒரு படத்தை நான் ரசிப்பதற்காக மிகவும் எதிர்பார்த்துக் காத்துள்ளேன்.

மற்றபடி பாப்கார்ன், சமோசா ஆகியவற்றுக்காகத்தான் மற்ற படங்களைப் பார்க்கிறேன். இப்போதும் மற்றவர்களின் படங்களை விட அமிதாப் நடிக்கும் படங்களைப் பார்க்க மிகவும் ஆர்வம் ஏற்படும்,” என அவர் சமீபத்தில் கூறியிருக்கிறார்.

மதுபாலா, அமிதாப்பின் தீவிர ரசிகையாக இருந்தாலும் மற்ற படங்களை பார்ப்பது வெறும், 'பாப்கார்ன், சமோசா' வுக்காகத்தான் என்பது மற்ற படங்களை எடுப்பவர்களின் மனம் நோகும்படிதான் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
பொன்னம்பலத்திற்கு கிடைத்த பெரும் தண்டனை! சக போட்டியாளர்கள் அதிர்ச்சி
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions