வில்லி வேடத்தில் நடிக்கும் மதுபாலா?

Bookmark and Share

வில்லி வேடத்தில் நடிக்கும் மதுபாலா?

கே.பாலசந்தரின் ‘அழகன்’ படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக அறிமுகமானவர் மதுபாலா. இப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’, ஷங்கரின் ‘ஜென்டில்மேன்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இவர் கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2013-ல் ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆனார்.

அதன் பிறகு தற்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த புதிய படத்தில் வில்லியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பரத் மார்ட்டின் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் ‘மகா நட்சத்திரம்’ என்ற படத்தில் மதுபாலா கொடூரமான வில்லியாக நடிப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த படத்தின் கதை மற்றும் தன்னுடைய கதாபாத்திரத்தை கேள்விப்பட்ட மதுபாலா உடனே இந்த படத்தில் நடிக்க சம்மதித்ததாகவும், இதுவரை எந்த நடிகையும் நடித்திறாத ஒரு வித்தியாசமான வில்லி கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions