மஹா நட்சத்திரத்தில் மதுபாலா!

Bookmark and Share

மஹா நட்சத்திரத்தில் மதுபாலா!

அழகன் படத்தில் பாலச்சசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் மதுபாலா. அதன் பிறகு வானமே எல்லை படத்தில் நடித்தார். மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் புகழ்பெற்றார். ஷங்கரின் ஜெண்டில்மேன், இருவர் உள்பட பல படங்களில் நடித்த மதுபாலா பாலிவுட்டின் பிசியான நடிகையானார். தமிழ் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டவர் இந்திப் படங்களில் மட்டுமே நடித்தார். அதன் பிறகு திருமணமாகி செட்டிலாகிவிட்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கிய வாயை மூடி பேசவும் படத்தில் ரீ-என்ட்ரி ஆனார். அந்தப் படம் சரியாக போகாததால் அவருக்கு தொடர்ச்சியாக தமிழில் வாய்ப்பில்லை. ஆனாலும் கன்னடத்தில் ஒரு படத்திலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மதுபாலா மீண்டும் தமிழுக்கு வருகிறார். அறிமுக இயக்குனர் பரத் மார்டின் என்பவர் இயக்கும் மஹா நட்சத்திரம் என்ற படத்தில் நடிக்கிறார். "நான் பொதுவாக புது இயக்குனர்களின் படத்தில் நடிப்பதில்லை. வெற்றி பெற்ற இயக்குனர்களின் படத்தில்தான் நடிப்பேன். ஆனாலும் இந்த கதை எனக்கு பிடித்திருந்தால் புது அணியுடன் இணைந்து பணியாற்றுகிறேன். வருகிற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது" என்று தனது வலைப்பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் மதுபாலா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions