சத்யராஜுடன் இணையும் மதுபாலா

Bookmark and Share

சத்யராஜுடன் இணையும் மதுபாலா

தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோஜா’ படத்தின் மூலம் கதநாயகியாக அறிமுகமானவர் மதுபாலா. அதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிய ‘ஜென்டில்மேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து 90-களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.

இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பதை தவிர்த்து, சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார் மதுபாலா. இந்நிலையில், கடந்த வருடம் வெளிவந்த ‘வாயை மூடி பேசவும்’ படத்தில் திடீரென சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இந்த படத்தைத் தொடர்ந்து சிறப்பான வேடம் கிடைத்தால், நடிப்பதை தொடரலாம் என முடிவு செய்தவருக்கு தற்போது நேரம் கைகூடி வந்திருக்கிறது. புதுமுக இயக்குனர் பாரத் மார்ட்டின் இயக்கும் ‘மகா நட்சத்திரம்’ என்ற படத்தில் மதுபாலா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் மதுபாலாவுக்கு முக்கிய கதாபாத்திரமாம். இவருடன் சத்யராஜும் இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் கதையை கேட்டதுமே, இதில் நடிக்க மதுபாலா நடிக்க ஒப்புக்கொண்டாராம். தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகவிருக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions