மூணே மூணு வார்த்தை இரண்டு மொழிகளில் ஏன்? மதுமிதா விளக்கம்

Bookmark and Share

மூணே மூணு வார்த்தை இரண்டு மொழிகளில் ஏன்? மதுமிதா விளக்கம்

வல்லமை தாராயோ, கொலை கொலையா முந்திரிக்கா படங்களுக்கு பிறகு இயக்குனர் மதுமிதா இயக்கும் புதிய படம் மூணே மூணு வார்த்தை. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகிறது.

தெலுங்கு வெர்சன் ஹீரோவாக ராக்கியும், தமிழ் வெர்சன் ஹீரோவாக அர்ஜுனும் நடித்து வருகிறார். இவர்களுக்கு ஹீரோயினாக அதிதி செங்கப்பா நடிக்கிறார். படம் முழுவதும் தெலுங்கு மற்றும் தமிழ் வெர்சனுக்காக தனித்தனி காட்சிகளில் நடித்திருக்கிறார்.

படத்தை இரண்டு மொழிகளில் இயக்குவது குறித்து மதுமிதா கூறியதாவது:

ஆரம்பத்தில் தமிழில் மட்டுமே இயக்க முடிவு செய்திருந்தேன். படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாரும், லட்சுமி மேடமும் கணவன் மனைவியாக நடித்திருக்கிறார்கள்.

இவர்கள் வயதான தம்பதிகளாக நடித்த தெலுங்கு படம் மிதுனம் சூப்பர் ஹிட்டாகி இருந்ததால் இதை தெலுங்கிலும் தயாரிக்கலாம் என்று தயாரிப்பாளர் எஸ்.பி.பி சரண் முடிவு செய்தார்.

படத்தின் வியாபார தளமும் விரிவடையும் என்பதால் தமிழ், தெலுங்கில் தயாரிக்க முடிவு செய்தோம். படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டது. தணிக்கை குழு யு சான்றிதழ் கொடுத்துள்ளது, வரிவிலக்கும் கிடைத்துள்ளது. இந்த மாத இறுதியில் ரிலீசாகிறது. என்கிறார் மதுமிதா.


Post your comment





Related News
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
தம்பதியாக ஹோட்டல் தொழிலில் இறங்கிய பிரபல நடிகை மற்றும் நடிகர்! என்ன ஸ்பெஷல்
சந்தானத்தால் கைவிடப்பட்ட பிரபல காமெடி நடிகை- பரபரப்பு பேட்டி
கோலிவுட் அருந்ததி ராயாக மாறிய மதுமிதா?
காதல்காலம் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட கமல்ஹாசன்
பேயாக நடிக்கும் ஜாங்கிரி மதுமிதா!
சின்னத்திரையிலும் காமெடிக்கே முதலிடம் கொடுக்கும் மதுமிதா!
தொடங்கியது மானே தேனே பேயே!
கவர்ச்சி வேண்டாம்… காமெடி மட்டும் போதும்… நடிகை மதுமிதா
ஈமு கோழி பிசினஸ் தொடங்கிய நடிகை மதுமிதா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions