நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த மாதுரி தீட்சித்துக்கு நோட்டீஸ்

Bookmark and Share

நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த மாதுரி தீட்சித்துக்கு நோட்டீஸ்

பிரபலமான நூடுல்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருக்கிறார் நடிகை மாதுரி தீட்சித். அந்த நூடுல்சின் விளம்பரப் படத்திலும் நடித்துள்ளார்.

மக்களுக்கு நன்கு அறிமுமான அந்த நூடுல்சில் மோனோ சைடியம் குளூடாமேட் உப்பு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பதை உத்தரபிரதேச மாநில உணவு பாதுகாப்பு நிர்வாக அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்க இந்த உப்பு அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்க கூடியது. இதையடுத்த உத்தரபிரதேசத்தில் அந்த நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்திற்கு உத்தர பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. "நீங்கள் குறிப்பிட்ட அந்த நூடுல்ஸ் சத்தானது என்று விளம்பரத்தில் கூறுகிறீர்கள் அதனை 15 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் உணவு கலப்பட சட்டத்தின் கீழ் உங்கள் மீது வழக்கு தொடரப்படும்" என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு எதிலும் மோனோ சோடியம் குளூடா மேட் உப்பு அளவுக்கு அதிகமா பயன்படுத்தவில்லை.

அதனை நிரூபிக்கத் தயார் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

 


Post your comment





Related News
நான் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, என் பழைய காதல் கதைகள் வேண்டாம்- கெஞ்சும் நாயகி
நடிகையாகவேண்டும் என்று நான் நினைத்ததில்லை : மாதுரி தீட்சித் பேட்டி
பிரபு தேவாவுடன் நடனம் ஆட பயப்படும் மாதுரி தீக்‌ஷிட்!
நூடுல்ஸ் பிரச்னை : அமிதாப், மாதுரி, ப்ரீத்திக்கு நோட்டீஸ்!
விலை மாதுவாக நடிக்கும் வடிவேலு நாயகி மீனாக்ஷி தீட்ஷித்!
தொடரும் ஸ்ரீதேவி - மாதுரி தீட்சித் மோதல்!
நாக சைதன்யாவுடன் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட மாதுரிமா
சன்னி லியோனுடன் மோதும் \"ஆம்பள\" மதுரிமா!
தமிழில் கவனம் செலுத்தும் மதுரிமா
வடிவேலுவின் செண்டிமென்டை உடைத்த மீனாட்சி தீட்ஷித்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions