மிரட்டும் வில்லியாக மதுஷாலினி

Bookmark and Share

மிரட்டும் வில்லியாக மதுஷாலினி

பாலா இயக்கிய, அவன் இவன் படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்தவர் மது ஷாலினி. அதற்கு முன்பே பல தெலுங்கு படங்களில் நடித்தவர். அவன் இவன் படத்துக்கு முன்பு தமிழில் பழனியப்பா கல்லூரி என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இந்திப் பக்கம் சென்று விட்டார். பூத் ரிட்டன்ஸ் படத்தில் நடித்த பிறகு நிறைய இந்தி வாய்ப்புகள் வருகிறது.

வில்லங்க இயக்குனர் ராம்கோபால் வர்மா இந்தி, தெலுங்கில் இயக்கி வரும் டிப்பார்ட்மெண்ட் படத்தில் படுபயங்கர வில்லியாக நடித்துள்ளார். தம்மு தண்ணி என்று ஆண் தாதாக்களுக்கு நிகராக நடித்திருக்கிறார் இந்தப் படத்தின் ஸ்டில்களை பார்த்துவிட்டுதான் மது ஷாலினியை தூங்காவனம் படத்தில் வில்லி கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறார் கமல். ஹீரோயினாக இழந்த வாய்ப்புகளை வில்லியாக திரும்ப பெற முயற்சிக்கிறார் மது ஷாலினி.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions