மெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா பீலிங்ஸ்!

Bookmark and Share

மெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா பீலிங்ஸ்!

மெட்ராஸ் படத்தில் நாயகனாக நடித்த கார்த்தியின் மார்க்கெட் அந்த படத்தின் வெற்றியால் மீண்டும் தலைநிமிர்ந்தது. அதோடு, அதே படத்தில் இன்னொரு ஹீரோ-ஹீரோயினி போன்று நடித்த கலையரசன்- ரித்விகாவின் நடிப்பும் பேசப்பட்டது.

அதனால் கலையரசன் சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதேபோல், அவருக்கு ஜோடியாக நடித்த ரித்விகா இப்போது கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்ற படத்தில் ஒரு இளவட்ட ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இதேபோல் அவர் கைவசம் மேலும் சில படங்களும் உள்ளன. ஆனால், அப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த கேத்ரின் தெரசாவுக்கு மட்டும் படத்தின் வெற்றி எந்த பலனையும் கொடுக்கவில்லை.

அதனால் மற்றவர்களைப்போன்று தனக்கும் புதிய படங்கள் கமிட்டாகும் என்று எதிர்பார்த்த அவர் ஏமாற்றத்தில் இருக்கிறார். அதோடு, அந்த படத்தில் தன்னுடன் நடித்தவர்களெல்லாம் இத்தனை புதிய படங்கள் கிடைத்திருக்கிறது என்று தன்னிடம் சொல்வதைக்கேட்டு, நானும்தான் அந்த படத்தில் நடித்தேன்.

நான் நன்றாக நடித்திருப்பதாகவும் சொன்னார்கள். இருப்பினும், எனக்கு மட்டும் ஏன் புதிய படங்கள் கிடைக்கவில்லை என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார் கேத்ரின் தெரசா.

அதேசமயம் மெட்ராஸ் படத்தில் நடித்தபோதே அதர்வாவுடன் நடிக்க கமிட்டான கணிதன் படமாவது தனக்கு தமிழில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துமா? என்றும் எதிர்பார்க்கத் தொடங்கியிருக்கிறார் கேத்ரின் தெரசா.


Post your comment





Related News
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
பாகுபலி ராணாவுக்கு அடுத்த ஜோடி இவர்களா! ஒன்றல்ல இரண்டு
தமிழை விட தெலுங்குக்கு முக்கியத்துவம் - பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு
நடிகைகளுக்கு உடல் அமைப்பு முக்கியம்: கேத்தரின் தெரசா
கடம்பன் முதல் நாள் வசூல்- இதோ
நடிகை கேத்ரின் அஜித் மற்றும் பிற நடிகர்கள் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?
குத்துப்பாட்டு ஒன்றில் நடனமாட ரூ.65 லட்சம் வாங்கிய கேத்தரின் தெரசா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions