மெட்ராஸ் ரித்விகாவின் ட்ரீம் ஹீரோ : அப்போ ரஜினி, இப்போ சூர்யா

Bookmark and Share

மெட்ராஸ் ரித்விகாவின் ட்ரீம் ஹீரோ : அப்போ ரஜினி, இப்போ சூர்யா

பாலா இயக்கிய பரதேசி படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தவர் ரித்விகா. அதையடுத்து சில படங்களில் நடித்தபோதும், கார்த்தி நடித்த மெட்ராஸ் படம் அவரை வெளிச்சம் போட்டு காட்டியது.

அந்த படத்தில் கார்த்தியின் நண்பனாக நடித்த கலையரசனும், ரித்விகாவும் ரொமான்ஸ் காட்சிகளில் இயல்பாக நடித்திருந்தனர். அதனால் அந்த படத்தில் கார்த்திக்கிற்கு இணையாக அவர்களும் பேசப்பட்டனர்.

அதையடுத்து, கலையரசன் சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால் ரித்விகாவுக்கு முதன்மை ஹீரோயினி வேடம் கிடைக்கவில்லை என்றபோதும், கவுண்டமணி நடிக்கும் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை உள்பட சில படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்து வருகிறார்.

அந்த படங்களில் அவருக்கும் ஜோடி நடிகர்கள் இருப்பதோடு பாடல் காட்சிகளும் உள்ளதாம். அதனால், விரைவில் முதன்மை கதாநாயகியாக நடிக்கும் அளவுக்கு நானும் வளர்ந்து விடுவேன் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் ரித்விகா.

மேலும், தமிழ் சினிமாவில் சின்ன வயதில் இருந்தே ரஜினிதான் எனது ட்ரீம் ஹீரோ. ஆனால் இப்போது சூர்யா என்று சொல்லும் ரித்விகா, அவர்களுடன் டூயட் பாட வேண்டும் என்ற பேராசையெல்லாம் எனக்கு இல்லை.

ஆனால், அவர்கள் படத்தில் ஏதாவது ஒரு கேரக்டரில் நடித்து விட வேண்டும் என்ற ஏக்கம் எனக்கு இருந்து கொண்டேயிருக்கிறது. அதனால் எனது ஆசையை அவர்களை வைத்து படம் இயக்கும் டைரக்டர்களிடம் சொல்லி நிறைவேற்றிக்கொள்ளப்போகிறேன் என்கிறார் ரித்விகா. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions