பிரபல சின்னத்திரை நடிகை தூக்குப்போட்டு தற்கொலை

Bookmark and Share

பிரபல சின்னத்திரை நடிகை தூக்குப்போட்டு தற்கொலை

சமீபகாலமாக சின்னத்திரை பிரபலங்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது. இது ரசிகர்களுக்கு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் மதுரவாயல் அருகே சின்னத்திரை துணை நடிகை சங்கீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் சங்கீதா. பல்வேறு தொலைக்காட்சியில் நடித்துள்ள இவர் கணவருடன் விவாகரத்து பெற்று தன்னுடைய மகனுடன் வசித்து வந்தார்.

சங்கீதாவுக்கு அவரது மகன் பலமுறை போன் செய்துள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அவருடைய மகன் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். அப்போது, கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே செல்ல, அங்கு சங்கீதா தூக்குப்போட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions